புத்தாண்டை முன்னிட்டு 4500 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை....
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபை 4500 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த சேவை இந்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ராஜா குணதிலக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பிலிருந்து இந்த விசேட பஸ் சேவை ஆரம்பமாகும் எனவும், மீண்டும் 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து கொழும்பை நோக்கி குறித்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ் வண்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதி பொதுமுகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு 4500 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை....
Reviewed by Author
on
April 03, 2016
Rating:

No comments:
Post a Comment