பூமிக்கு அடியில் ரகசியமாக பாதுகாக்கப்படும் 5,000 டன் எடையுள்ள தங்க கட்டிகள்....
பிரித்தானிய நாட்டில் உள்ள பாதாள அறையில் 5,134 டன் எடையுள்ள தங்க கட்டிகளை அந்நாட்டு அரசாங்கம் ரகசியமாக பாதுகாத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள Threadneedle சாலையில் ‘இங்கிலாந்து வங்கி(Bank of England) இயங்கி வருகிறது.
இந்த வங்கி அமைந்துள்ள நிலப்பரப்பிற்கு கீழே உள்ள பாதாள அறைகளில் தான் 5,134 டன் எடையுள்ள தங்க கட்டிகள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உலகில் உள்ள ஒட்டுமொத்த தங்கத்தின் இருப்பை ஒப்பிடும்போது, இங்குள்ளது 5-ல் ஒரு பகுதி ஆகும். சுமார் 3 லட்சம் சதுரடி பரப்பளவில் உள்ள இந்த ரகசிய அறையில் உள்ள தங்கத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 172 பில்லியன் பவுண்ட் (3,62,18,04,00,77,400 இலங்கை ரூபாய்) ஆகும்.
இதுமட்டுமல்லாமல் லண்டன் நகர வீதிகளின் நிலப்பரப்பிற்கு கீழ் ஆங்காங்கு சுமார் 1,000 டன் எடைக்கும் அதிகமான தங்க கட்டிகளும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 1930ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த ரகசிய பாதாள அறைகளுக்கு ஒரு சிலர் மட்டுமே செல்ல முடியும். அதுமட்டுமில்லாமல், இந்த அறைகளை திறப்பதற்கு குறிப்பிட்ட உயர் அதிகாரி ஒருவரின் ‘குரல் ஒலியும்’ மற்றும் 3 அடிகள் நீளமுள்ள சாவியும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ரகசிய பாதாள அறையை பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் இறுதியாக கடந்த 2012ம் ஆண்டு ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு அடியில் ரகசியமாக பாதுகாக்கப்படும் 5,000 டன் எடையுள்ள தங்க கட்டிகள்....
Reviewed by Author
on
April 22, 2016
Rating:

No comments:
Post a Comment