அண்மைய செய்திகள்

  
-

மன்னார் மண்ணில் மறைந்தும் மறையாமல் மனதில் பிரகாசிக்கும் மாணிக்கம்-மகீதன் என்னும் -தம்பா முழுமையான படங்கள் இணைப்பு

மன்னார் மண்ணில் மறைந்தும் மறையாமல் மனதில் பிரகாசிக்கும் மாணிக்கம்

மனதில் பிரகாசிக்கும் மாணிக்கம் இப்பகுதியில் விம்பம் ஊடாக எம்மை காணவருபவர் கால்பந்து- கூடைப்பந்து -வலைப்பந்து -மேசைப்பந்து -கிறிக்கெட் செஸ்-கரம் போன்ற விளையாட்டிலும் கல்வியிலும் மனிதபண்பிலும் பன்முக ஆளுமையின் மையம் மன்னார் மண்ணின் பெருமையை உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்து மறைந்த மறையாத
மாணிக்கம் 26 வயது இளம் சு10ரியன் மகீதன் என்னும்      
தம்பா அவர்கனைப்பற்றிய அவரின் உயிர்மூச்சு உள்ளவரை தமிழனாக  தனது விளையாட்டாலும் கல்வியாலும் தனது திறமையாலும் மன்னாரின் பெருமையை பறைசாற்றிய மகீதன் அவர்களின் நினைவு தொகுப்பு இது…

இன்று-29-04-2016  31ம் நாள் நினைவஞ்சலியில் உம்மை நினைத்து…..

21-04-2016 அன்று தான் மகீதன் பிறந்த நாளும் வந்து போனது…….

மன்னார் மண்ணில் மறைந்தும் மறையாமல் மாணிக்கம் மகீதன் 1989 ஏப்பிரல் 21ல் உடுவில் ஊரில் உதித்த இளம் சூரியன் மகீதன் 2016-03-30 இல் வயம்ப மாணவனாக மாக்கந்துறை ஊரில் மறைந்து விட்ட சோகத்தில் மன்னார் மக்கள் பரிதவித்து நின்றது நினைவாக…
ஆம் அவன் வாழ்வு 26 வருடங்கள் 11மாதங்கள் 09 நாட்கள் மின்னாது முழங்காது அகாலத்தில் முடிந்து விட்ட துயரத்தினை யாரால் தான் தாங்க முடியும்.
வாழ்ந்து முடிந்த குறுகிய காலத்துள் அவன் தேடிக்கொண்ட நண்பர்கள் கூட்டம் கொஞ்சமா….நெஞ்சமா….அவன் சாதித்து விட்டது எண்ணிலடங்காது….

கற்றலைக்காதலித்தான்
தடகளத்தில் தவம் புரிந்தான்
விளையாட்டு அவன் மூச்சு
எவ்விடத்தும் அவன் பேச்சு

அப்பா பல்வர் ஜெயராஜா வங்கிப்பணியிலும் அம்மா நிர்மல ரஞ்சனி கல்விப்பணியிலும் அன்பான துஷி அக்கா அழகான குடும்பம் அளவான குடும்பம் நீ மட்டும் தான் நினைவாக….

ஆரம்பக்கல்வி உடுவிலூரில்
அடுத்து அவன் கற்றதெல்லாம் மன்னார் மண்ணில்
புகழ்மிகு புனித சவேரியாரில் ஒளிர்ந்து நின்றான்
நற்பெருமை தேடித்தந்தான் கல்லூரிக்கு….

ஆண்டிரண்டில் ஆரம்பித்த அவனது படிப்பு
கண்டு விட்ட சோதனைகள் ஒன்றிரண்டா?
களமதனில் கால்தனிலே காயப்பட்டான்
பேருந்தில் சிக்கி மறு பிறப்பெடுத்தான்…

உயர்தரத்து தேர்வதனை எழுதும் நாளில்
உள்ளிருந்து கல் அடைசல் உடைந்ததாலே
மாவட்ட மாணவருள் முதல்வனாக வரவிருந்த
வாய்ப்புதனை நழுவவிட்டான்…

உள்ளுர ஏமாற்றம் உணர்ந்த போதும்
உடைந்தது மனம் சலிக்கவில்லை-சோரவில்லை
திடம் கொண்டு தனக்கு நெறி துணிந்து கொண்டு
தொடர்ந்து கற்றான் வயம்ப எனும் வளாகத்தில்….

பதின்ம வயதில் உள்ள உருவம் சிறியதுதான்
பன்னிரண்டு வயது வரை காற்பந்து உனக்கு நூற்பந்து
அகில இலங்கைக்குள் அறுநூறு மாணவருள் அரித்தெடுத்த
அறுபதுக்குள் நீ வந்து முப்பதுக்குள் முந்தி நின்றாய்…
கடுகு சிறியதுதான் காரம் மிகுதி என களிப்புடனே
கண்டு கொண்டனர் துறைவல்லோர் நன்கு….

பிறந்த பொன்னாட்டின் திறமைதனை நிறுவி விட்டாய்
தாய்லாந்து மண்ணிலும் வங்காளதேசத்திலும்
கண்டவர் வியந்தனர் உன் ஆடும் திறன் கண்டு
பெருமிதம் கொண்டது தேசமட்டுமல்ல கல்லூரியும் தான்

அடுத்து உனக்கு வாய்த்தது ஆடுதற்கு வாய்ப்பு
மலேசியா மண்ணில் வயம்ப வளாகத்தில் சார்பில்
அங்கும் நீ சூரனென சாதனைகள் படைத்தாய்
இவைதவிர சாதனைகள் அடங்கிடுமோ எண்ணில்
அதனைத்தான் கண்டு கொள்வீர்….

மாகாண மட்டத்தில் நீ வென்று வந்தபோதும்
வங்காளதேசத்தில் புகழ் நாட்டி வந்தபோதும்
மன்னாரின் வாசலிலே உமக்கு செங்கம்பள வரவேற்பு
அந்நாளில் அதனை நீ கண்ணாரக் கண்டாய்……

இந்நாளில் தோழர் உன் இறுதி வரவேற்பை…
தள்ளாடி தனிலிருந்து வீடடைவு தொலைவு
உந்துருளிப்பவனியிலே ஊர்ந்து வந்த கோலம்
கண்ணாரக்காண்பதற்கு நீ அன்று உயிரோடு இல்லை
மன்னார் மண் மறந்திடுமோ தோழமையின் ஆழம்….

இதோ உனது தோழமையின் ஆழத்தினை உணர்த்தும்
ஒரு தோழன் எழுதிய உணர்வு வரிகள்….

எம்மவர் எல்லோருக்கும் நீ தம்பி என்பதால்
உனைத் தம்பா என உரிமையுடன் அழைத்தோம்
அத்தனை துறைகளிலும் வித்தகன் நீ என்று
அடிக்கடி மனதிலே பெருமிதமடைந்தோம்…

அறிவையும் திறனையும் அள்ளி அளித்தவன்
ஆயுளை மட்டுமேன் பாதியில் முடித்தான்???
கண்ணூறு அல்ல எம் தம்பியே உன்மேல்
கண் இலட்சங்கள் விழுந்ததால்
வீழ்ந்தாயோ மண்ணில்!



நீ அங்கம் வகித்த அன்புடன் நேசித்த
பசுமை வயல் விளையாட்டு கழகத்தார் வெளியிட்ட
உயிருள்ள வரிகள் இவை…


பசுமை வயற்கழகத்தின் செல்லத்தம்பி கழகம்
களங்கள் பல வென்றதுவே உன்னை நம்பி
விடுமுறையில் நீ வீடு வரும்போதெல்லாம்
நீ களிப்பதெல்லாம் உன் அன்பு நண்பரோடு…

காற்பந்துடன் மட்டும் நீ நிற்கவில்லை
பூப்பந்து வலைப்பந்து மேசைப்பந்து
விளையாட்டிலும் நியே ஒளிர்ந்து நின்றாய்
தம்புள்ளையில் துடுப்பாடி சதமடித்தாய்….

உன் திறமைக்கு உரிய களம் வாய்க்கவில்லை
என்ற குறை உன்னுள்ளே உருகியது உண்மைதான்
இடது கரம் அறியாத வலது கரக்கொடைகள்
ஏண்ணி எண்ணி ஏங்குகிறார் உன் கருணை பெற்றோர் …

படிப்பதனை முடித்து வீட்டுப்பணி ஒன்று தேடி
வாய்ப்பு வர “நியூஸி” சென்று அக்காவின் மகனை
காற்பந்தில் ஜம்பவான் ஆக்கும் உனதெண்ணம்
கனவாகிப்போனதுவே கலங்குகிறது உள்ளம்…

கருவிலே உனைத் தெரிந்து கொண்ட தேவன்
சில காலம் களமாடும் காட்சி காட்டி
காலம் வரக் கவர்ந்து கொண்ட தேவசித்தம்
அருகாக உன்னுடனே உறையத்தானோ!!! 

மன்னார் மண்ணின் மைந்தன் ப.ஜெ.மகீதன் பெற்ற பரிசுகளும் பாராட்டுக்களும் சான்றிதழ்களும் வென்ற விருதுகளும் கேடையங்களும் பதக்கங்களும்…..




  •  Foot Ball Federation of Sri Lanka- Certificaet&Medal Under 13 Inner Zone Champions-2002
  •  St.Xaviers Boys National College- Certificaet&Medal
  •   Sri Lanka National Team Foot Ball Under-13- 2002- Medal
  • Peace Through Sports Inner School Peace Speech Tournament 02-04-09-2004
  •  Man Of the Match-St.Xaviers National College Media sponser Sooriyan FM
  •  18+Scholaship Bank Of Ceylon-2007- Certificaet&Medal Northern Province Foot Bool(Men)-2012- Certificaet&Medal
  •  Provincial Sports Festival
  •  Xxviii National Sports festival-2012
  •  Minister Of Sports&Department of  Sports Devalapment Certificaet&Medal 
  •  UISF-The UITM International Sports Fiesta-2012
  • Wayamba Univercity Of Sri Lanka Futsal Team 06-10 spet-2012- Certificaet&Medal
  • University Texnologi Marn U.I.T.M SHAH ALAM SELANGOOR-MALASIYA.
  •  SRI LANKA UNIVERCITES COLOUR NIGHT-2013-on 9th April-2014 at the BMICH.




Member Of University Team
  • Foot Ball-2011-2014 
  •  Basket Ball-2012-2014
  •  Table Tennis -2011-2014
  •   2013-SLUSA Colours Award Foot Ball(SLUSA-Sri Lankan University Sports Association)
  • 2014-Basket Ball Vice Captan
  • 2013-2014-Wayamba University Colours For Foot Ball- Certificaet&Medal
  •   2012-Went to Malasiya For Foot Ball- Certificaet&Medal

இவை அனைத்தும் இவன் பெற்றுக்கொண்டதில் ஒரு பகுதிதான் இன்னும் ஏராளம் உள்ளபோதும் நாம் அதை செல்ல முன்வரவில்லை முடியவும் இல்லை ஏனெனில் அவன் எம்மோடு இல்லை….
ஆனால் அவன் நினைவுகள் எம் நெஞ்சை விட்டு நீங்காது கண் தூங்காது… மன்னார் மண்ணும் மகீதன் நண்பர்களின் மனதிலும் வாழுகின்றான் அவன் புகழ் என்றும் அழியாது அவை ஒவ்வொன்றும் சாதனைகள் சரித்திரமாகிய காவியங்கள்.......
 மன்னார் மண்ணில் மறைந்தும் மறையாமல் வாழுகின்ற இளம் மாணிக்கம் தம்பா எனும் மகீதன்……………………………..

மன்னார் மண்ணின் மைந்தன்
மகீதன் விளையாட்டில் நீ வேந்தன்
மறக்க முடியுமா தம்பா உன்னை-எம்
மனங்களை வென்றாய் அன்பா….

அன்னையும் தந்தையும் அக்காளும்
அயலவரும் அனைத்து உறவுகளும்
அலையலையாய் உன்னை நினைக்க
ஆத்மாத்தமான நண்பர்கள் உன்னை அனைக்க----முடியவில்லையே!!!

தகவல்---குடும்பத்தார்
தொகுப்பு-வை.கஜேந்திரன்-














































மன்னார் மண்ணில் மறைந்தும் மறையாமல் மனதில் பிரகாசிக்கும் மாணிக்கம்-மகீதன் என்னும் -தம்பா முழுமையான படங்கள் இணைப்பு Reviewed by Author on April 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.