அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரனை-யூன் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு-Photos



மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி தோண்டுவதற்கான நடை முறைகள் எவையும் இல்லை என்றும்,குறித்த நடைமுறைகள் சம்மந்தமாக மனித புதை குழி தோண்டுவதற்கான ஒழுங்கு விதி ஒன்றை வரைந்துள்ளதாகவும்,குறித்த ஒழுங்கு விதிகளை சுகாதார அமைச்சிடம் கையளிக்கவுள்ளதாகவும்,அதனை சுகாதார அமைச்சு நிதி அமைச்சு மூலம் நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதாகவும்,குறித்த செயற்பாடு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதன் பின் மனித புதைகுழியை தோண்ட முடியும் என சிரேஸ்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் வைத்தியரட்ன மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை கொண்டுவந்துள்ளார்.

இந்த நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிக்கு சற்று அருகில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணறு தொடர்பான வழக்கு விசாரனையை எதிர்வரும் யூன் மாதம் 6 திகதி வரை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா ஒத்தி வைத்துள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்ட இடத்திற்கு சற்று தொலைவில் அடையாளம் காணப்பட்ட கிணற்றை தோண்டுவது தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.

-இதனைத்தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 1.45 மணியளவில் குறித்த புதைகுழி தொடர்பான வழக்கு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் அவ்வாறு தெரிவித்தார்.

குறித்த வழக்கு விசாரனைகள் குறித்து காணாமல் போனவர்களின் குடும்ப உறவுகள் சார்பாக கலந்து கொண்ட சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மேலும் தெரிவிக்கையில்,,,,

குறித்த வழக்கின் பிரகாரம் ஏற்கனவே மன்னார் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் நீதிமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

-குறித்த கலந்துரையாடலில் மாவட்ட வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டிருந்ததோடு,ஏற்கனவே அழைக்கப்பட்ட அரச திணைக்களங்கள் 13 இன் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்ததோடு படைத்தரப்பினர்,திணைக்கள அதிகாரிகள்,சட்டத்தரணிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கண்டு பிடிக்கப்பட்ட கிணறு தோண்டுவது குறித்தும்,அதன் நடைமுறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த கிணற்றை தோண்டுகின்ற போது தேவைப்படுகின்ற நிதியினை பெற்றுக்கொள்ளுவது எப்படி மற்றும் தோண்டுவதற்கான இயந்திய உபகரணங்களை பெற்றுக்கொள்ளுதல்,தோண்டும் போது பின் பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.இதன் போது சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் வைத்திய ரட்ன அவர்களினால் குறித்த கலந்துரையாடலில் சில முக்கிய விடையங்களை முன் வைத்தார்.

இது வரை காலமும் மனித புதை குழி தோண்டுவதற்கான நடை முறைகள் எவையும் இல்லை என்றும்,தான் குறித்த நடைமுறைகள் சம்மந்தமாக மனித புதை குழி தோண்டுவதற்கான ஒழுங்கு விதி ஒன்றை வரைந்துள்ளதாகவும்,குறித்த ஒழுங்கு விதிகளை சுகாதார அமைச்சிடம் கையளிக்கவுள்ளதாகவும்,அதனை சுகாதார அமைச்சு நிதி அமைச்சு மூலம் நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதாகவும்,குறித்த செயற்பாடு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதன் பின் மனித புதைகுழியை தோண்ட முடியும் என வைத்தியர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இந்த நிலையில் குறித்த வழங்கை விசாரனை செய்த மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா குறித்த புதை குழி தொடர்பான வழக்கு விசாரனையினை மீண்டும் எதிர்வரும் யூன் மாதம் 6 ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மேலும் தெரிவித்தார்.




மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரனை-யூன் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு-Photos Reviewed by NEWMANNAR on April 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.