74 மில்லியன் நிதியில் மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்!
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 2016ம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ் மன்னார் மாவட்ட வீதிகளைப் புனரமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் 74 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட மடு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பரப்புக்கடந்தான் பிரமனாலங்குளம் வீதியின் கல்வெட்டுக்கள் அமைக்கும் வேலைத் திட்டத்தை, ரூபாய் 5.2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நேற்று மாலை 2.30 மணியளவில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 74 மில்லியன் ரூபாய் நிதியில் கீழ் 08 வீதிகள் தெரிவு செய்யப்பட்டு புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
முருங்கன் நானாட்டான் வீதி - 06 மில்லியன்
பொற்கேணி பண்டாரவெளி வீதி - 11 மில்லியன்
உயிலங்குளம் அடம்பன் வீதி - 3.8 மில்லியன்
ஊசிமூக்கன்துறை வீதி எருக்கலம்பிட்டி - 04 மில்லியன்
எருக்கலம்பிட்டி ஆமைப்படுக்கை வீதி - 02 மில்லியன்
மகிழங்குளம் பள்ளமடு வீதி கல்வெட்டுக்கள் 18 - 06 மில்லியன்
பரப்புக்கடந்தான் பிரமனாலங்குளம் வீதி கல்வெட்டுக்கள் 02 - 5.2 மில்லியன்
பூவரசங்குளம் துணுக்காய் வீதி கல்வெட்டுக்கள் 14 - 06 மில்லியன்
நிகழ்விற்கு வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம், மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி, உதவி பிரதேச செயலாளர் வீதி அபிவிருத்தித் திணைக்கள மன்னார் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் ரகுநாதன், மாந்தை மேற்கு பிரதேச சபை செயலாளர், மன்னார் மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் எம்.துசியந், மற்றும் அந்த கிராமத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
74 மில்லியன் நிதியில் மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்!
Reviewed by NEWMANNAR
on
April 30, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 30, 2016
Rating:


No comments:
Post a Comment