மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குமானாயன்குளம் கிராமத்தினுள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம்.Photos
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆள்காட்டி வெளி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குமானாயன்குளம் கிராமத்தினுள் நேற்று வெள்ளிக்கிழமை (29) காட்டு யானைகள் புகுந்து வீடுகளில் காணப்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள மக்களின் குடியிறுப்புகளுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை(29) இரவு காட்டு யானைகள் புகுந்து மக்கள் குடியிருப்புகளையும் பயன் தரும் தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
-இதனால் அப்பகுதியில் உள்ள பயன் தரக்கூடிய சுமார் 10 தென்னை மரங்கள் சேதமாகியுள்ளது.
எனினும் கிராம மக்களுக்கு எவ்வித பாதீப்புக்களும் ஏற்படவில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குமானாயன்குளம் கிராமத்தினுள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம்.Photos
Reviewed by NEWMANNAR
on
April 30, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 30, 2016
Rating:








No comments:
Post a Comment