யாருக்கும் அஞ்சாத வடகொரியா! மீண்டும் ஏவுகணை சோதனை....
ஐ.நா. மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் எதையும் பின்பற்றாமல், வடகொரிய அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக தென் கொரியா மற்றும் அமெரிக்காவை அழிப்போம் என்று வடகொரிய அதிபர் பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்து வருகிறார்.
அதற்கேற்ப கடந்த ஜனவரி 6-ம் திகதி வடகொரியா 4-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த பரபரப்பான சூழ்நிலை யில், வடகொரியா நேற்று சான் டோக் பகுதியில் இருந்து அதி காலை 3.45 மணிக்கு மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது என்று தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டது. ஆனால், ஏவுகணையின் திறன் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
வடகொரியா அரசு ஏவுகணை சோதனை எதுவும் நடத்த கூடாது என்று ஐ.நா. தடை விதித்துள்ளது. இதை மீறி ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், பல நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடையும் விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்கும் அஞ்சாத வடகொரியா! மீண்டும் ஏவுகணை சோதனை....
Reviewed by Author
on
April 02, 2016
Rating:

No comments:
Post a Comment