மன்னார் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் நடாதிய திருவள்ளுவர் விழா இன்று மாலை அமர்வு வள்ளுவன் வாசுகி அரங்கு.....
2ம் இணைப்பு,,,,,,,,,
மன்னார் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் நடாதிய திருவள்ளுவர் விழா இன்று-16-04-2016 மாலை அமர்வு வள்ளுவன் வாசுகி அரங்கு மு-ப-3-00 தொடக்கம் 6-30 மணி வரை மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. மன்னார் தபாற்சந்தியில் இருந்து விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு வள்ளுவபெருமானுக்கு மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்ட்டதோடு விழாமண்டபத்தில் விருந்தினர்கள் மங்கலவிளக்கேற்ற தமிழ்தாய் வாழ்த்தினை திருமதி மைதிலி அமுதன் இசைக்க அரங்க சிறப்புரையினை தேசியக்கலைஞர் திரு.எஸ்.ஏ.உதயன் அவர்கள் வழங்ககினார்.
வரவேற்பு நடனத்தினை ஸ்ரீ சாகித்தியா நாட்டியப்பள்ளி மாணவிகள் வழங்க வரவேற்புரையினை திரு.பி.சிந்தாத்துரை அவர்கள் வழங்க தலைமையுரையினை மன்னார் தமிழ்சங்கத்தின் தலைவர் மஹா.தர்மகுமார சர்மா அவர்கள் வழங்ககினார்.
சிறப்புக்கவியினை ஜே.ஆர்.மயூரன் அவர்களும் ந.பிரதீப் அவர்களும் வழங்கினாரகள் அதனைத்தொடர்ந்து
திருக்குறள் நடனம் கலார்ப்பனா நாட்டியப்பள்ளி
கிராமிய நடனம் கவின்கலாலயா நாட்டியப்பள்ளி
நடனம் பரதக்கலாலயா நாட்டியப்பள்ளி
நடனம் ஸ்ரீ சாகித்தியா நாட்டியப்பள்ளி மாணவிகள் வழங்க
விருந்தினர்கள் உரைகளோடு பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாண தமிழ்ச்சங்க தலைவரும் பீடாதிபதி-முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பேராசிரியர்.தி.வேல்நம்பி அவர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.
சிறப்பு பட்டி மன்றம் நவீனகாலத்தில் திருக்குறள் நிலையாக நிற்கின்றது எனும் தலைப்பில் திரு.மன்னார் அமுதனும் திரு.எஸ்.ஷதீஸ் நிலையிழந்து போகின்றது எனும் தலைப்பில் திரு.ராதா பெர்னாண்டோ அவர்களுடன் திரு.எஸ்.றமேஸ் அவர்களும் கலந்து கொள்ள நடுவராக தமிழ்நேசன் அடிகளார் தீர்ப்பினை வழங்கினார்.
சிறப்பாக நாட்டிய நடனங்களை வழங்கிய மாணவவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டதோடு சிறப்பு நிகழ்வாக
இளங்கலைஞர் கௌரவிப்பு,,,,,,,,,,
ஊடகத்துறை விருது-எஸ்.ஆர்.லெம்பேட்
எழுத்தியல் துறை விருது-மன்னார் அமுதன்
இயல்துறை விருது-சோ.றோகன் ராஐ;
இசைத்துறை விருது-சி-திலக்ஷன்
குறும்படத்துறை விருது-அ.நிஷாந்தன்
கவித்துறை விருது-ஜே.ஆர்-மயூரன்
இவர்களுக்கு பொன்னாடை அணிவித்து விருதுகளையும் சான்றிதழ்களையும் யாழ்ப்பாண தமிழ்ச்சங்க தலைவரும் பீடாதிபதி-முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பேராசிரியர்.தி.வேல்நம்பி அவர்களுடன மன்னார் தமிழ்சங்கத்தலைவர் வழங்கி வைத்தார்கள.; இவர்களுடன் மூத்த கலைஞர்களான வைத்திய கலாநிதி தேசகீர்த்தி தேசஅபிமானி விருது பெற்ற செல்வக்கண்டு லோகநாதன் அவர்களுக்கும் ஜோக்கின்ராஜ் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு மன்னார் மாவட்டத்தில் நாட்டியப்பள்ளிகளை திறம்பட செயற்படுத்தி கலைப்பணியாற்றும் 05 நாட்டடியப்பள்ளிகளின்
- பரதகலாலயா-நுண்கலைமாணி திருமதி.தயாளன் செல்வவனிதா
- கலார்பணா- நுண்கலைமாணி திருமதி.ரவிக்திரநாத் றஞ்சனா கிறிஸ்ரலின்
- கவிதாலயா- நுண்கலைமாணி திருமதி.எடின்பரோ சுகிர்தா
- கவின் கலாலயா- நுண்கலைமாணி திருமதி.கனியூட் கயல்விழி
- ஸ்ரீ சாகித்தியா- கலாவித்தகர்-நாட்டிய ரஞ்சனி- திருமதி.உஷா ஸ்ரீகந்தராஐh இவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து நினைவுச்சின்னமும் சான்றிதலையும் மன்னார் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் பு.மணிசேகரம் அவர்களுடன் மன்னார் தமிழ்ச்சங்கத்தலைவர் வழங்கி வைத்தார்.
பிரதம விருந்தினராக- பேராசிரியர்.தி.வேல்நம்பி யாழ்ப்பாண தமிழ்ச்சங்க தலைவரும் பீடாதிபதி-முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
சிறப்பு விருந்தினர்களாக----
- திரு.கே.எஸ்.வசந்தகுமார்-பிரதேச செயலாளர் மன்னார்
- ஐனாப் எம்.எம்.சியான்- முன்னாள் வலையக்கல்விப்பணிப்பாளர்
- திரு.எம்.ஏ.ஜே.துரம்-உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மன்னார்
- திரு.எஸ்.என்.ஜி.நாதன் தலைவர் தமிழ்ச்சங்கம்-வவுனியா
- வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன் தலைவர்-இந்து ஆலயங்களின் ஒன்றியம்.
- திரு.செ.சி.இராமகிருஸ்ணன் தலைவர்-இந்து மஹாசபை மன்னார்
கௌரவ விருந்தினர்கள்-----
- திரு.த.தனேஸ்வரன்-அதிபர் மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி தே.பா
- அருட்சகோ.ச.இ.றெஜினோல்ட-;-மன்.புனித.சவேரியார் ஆண்கள் தே-பா
- ஜனாப்-எம்.எம்.மாஹிர் அதிபர்-மன்.அல்அஸ்ஹர் தேசிய பாடசாலை
- திருமதி.பு.மணிசேகரம் கலாச்சார உத்தியோகத்தர் மன்னார்
- வைத்திய கலாநிதி கே.அரவிந்தன்
- வைத்திய கலாநிதி எஸ்.லோகநாதன்
- திரு.ஏ.ரீ.லுஸ்ரின் மோகன்ராஜ்-இணைப்பாளர் திருமறைக்கலாமன்றம்-மன்னார்
- திரு.எல்.ஜி.வாஸ் கூஞ்ஞ மூத்த ஊடகவியலாளர்-மன்னார்
- திரு.கீதப்பொன்கலன் மூத்த கலைஞர்-மன்னார்
இவர்களுடன் மாணவமாணவிகள் ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர்கள் தமிழ் ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
நன்றியுரையினை திரு நிக்சன் அவர்கள் வழங்க தமிழ்த்தாய் வாழ்த்தினை திருமதி மைதிலி அமுதன் இசைக்க
நிகழ்ச்சித்தொகுப்பினை திரு.அருள்ராஜ் அவர்களுடன் செல்வி.அம்பிகா தொகுத்து வழங்கினர் வள்ளுவர் வாசுகிஅரங்கு நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.
மன்னார் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் நடாதிய திருவள்ளுவர் விழா இன்று மாலை அமர்வு வள்ளுவன் வாசுகி அரங்கு.....
Reviewed by Author
on
April 16, 2016
Rating:

No comments:
Post a Comment