மன்னார் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் நடாத்தும் திருவள்ளுவர் விழா
மன்னார் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் நடாத்தும் திருவள்ளுவர் விழா இன்று காலை அமர்வு மு-ப-9-30 தொடக்கம் 1-00 மணி வரை மிகவும் சிறப்பாக இடம் பெற்றது மன்னார் தபாற்சந்தியில் இருந்து விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு வள்ளுவபெருமானுக்கு மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்ட்டதோடு விழாமண்டபத்தில் விருந்தினர்கள் மங்கலவிளக்கேற்ற தமிழ்தாய் வாழ்த்தினை திருமதி மைதிலி அமுதன் இசைக்க அரங்க சிறப்புரையிரனை கவிஞர் வை.கஜேந்திரன் வழங்ககினார்.
வரவேற்பு நடனத்தினை பரதக்கலாலய நாட்டியப்பள்ளி மாணவிகள் வழங்க வரவேற்புரையினை திரு.எம்.ஏ.றோஐ; வழங்க தலைமையுரையினை மன்னார் தமிழ்சங்கததின் தலைவர் மஹா.தர்மகுமார சர்மா அவர்கள் வழங்ககினார்...
சிறப்புக்கவியினை பு.சிவகொளரி அவர்களும் அ.நிசாந்தன் அவர்களும் வழங்கினார் விருந்தினர்கள் உரைகளோடு பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் மேலதிக அரசாங்க அதிபர் அவர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது. அத்தோடு சிறப்பு நிகழ்வாக மன்னார் மாவட்டத்தின் தேசிய பாடசாலைகளான….
மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை
மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை
மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி
மன்-அல்-அஷ்ஹர் தேசிய பாடசாலை
மாணவமாணவிகளுக்கு இடையிலான தமிழறிவுப்போட்டி நடைபெற்றது. முதலாம் இடத்தினை மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியும்
2ம் இடத்தினை மன்-அல்-அஷ்ஹர் தேசிய பாடசாலையும்
3ம் இடத்தினை மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையும் 4ம் இடத்தினை மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையும் பெற்றுக்கொண்டது இவர்களுக்கான சான்றிதழ்கள் பரிசுப்பொதிகளும் வழங்கப்பட்டது. நடுவர்களாக திருமதி டிலானி ஆசிரியர் திருமதி பு.மணிசேகரம் கலாச்சார உத்தியோகத்தர மற்றும் திருமதி பெப்பி லெம்பெட் தமிழ் உதவிக்கல்லிப்பணிப்பாளர் அவர்களுடன் திரு.எஸ்.ராதாபெர்ணான்டோ உப தலைவர் மன்னார் தமிழ்சங்கம் செயற்பட்டனர.;
பிரதம விருந்தினராக திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் மேலதிக அரசாங்க அதிபர் அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக----
திரு.எம்.பரமதாசன்-பிரதேச செயலாளர் நானாட்டான்
திருமதி சுகந்தி செபஸ்ரியன்-வலையக்கல்விப்பணிப்பாளர்
திரு.எக்ஸ்.எல்.றெனால்ட்-செயலாளர் நகரசபை
திரு.வே.இறைப்பிள்ளை பெருந்தலைவர் தமிழ்ச்சங்கம்-கிளிநொச்சி
திருமதி.கனகாம்பிகை உதவி பிரதேச செயலாளர்.
கௌரவ விருந்தினர்கள்-----
திருமதி-பெப்பி லெம்பேட்-தமிழ் உதவிக்கல்விப்பணிப்பாளர்
திரு.எஸ்.சண்முகலிங்கம் முகாமையாளர் ஆங்கில வளநிலையம்
திருமதி-அஞ்சலா-வைத்தியர்
திருமதி-ரஞ்சினி சிறில் அன்ரனி வேள்ட்விஷன் லங்கா
திரு.எஸ்.தினகரன்-ஆகாஷ் கொட்டல் உரிமையாளர்
திரு.எஸ்.ஏ.உதயன்-தேசியக்கலைஞர்
ஜனாப்.புர்ஹான்-பம்பாய் நகையகம்
திரு.மாசிலாமணி நாட்டுக்கூத்து கலைஞர்
இவர்களுடன் மாணவமாணவிகள் ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர்கள் தமிழ் ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
நிகழ்ச்சித்தொகுப்பினை திரு.சுதர்சன் அவர்களுடன் செல்வி.வெற்றிச்செல்வி தொகுத்து வழங்கினர் பரிமேலழகர் அரங்கு நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.
மன்னார் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் நடாத்தும் திருவள்ளுவர் விழா
Reviewed by Author
on
April 16, 2016
Rating:

No comments:
Post a Comment