ஆடுவாரா மலிங்க....... ?
9ஆவது ஐ.பி.எல். தொடர் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகின்றது. இதன் முதல் போட்டியில் நடப்பு சம்பியன் மும்பை இந்தி யன்ஸ் அணி விளையாடுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராகக் கருதப்படும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இந்தத் தொடரில் ஆடுவரா என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
காரணம் அவர் சில நாட்களாக காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார். ஆசியக் கிண்ணத்தில் ஒரு போட்டியுடன் விலகியிருந்தார் மலிங்க. அதேபோல நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலை யில் நாடு திரும்பினார் மலிங்க.
இந்நிலையில் ஐ.பி.எல். போட்டிகளில் அவர் கலந்துகொள்வாரா என்பதை பலரும் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆடுவாரா மலிங்க....... ?
Reviewed by Author
on
April 09, 2016
Rating:

No comments:
Post a Comment