கிணற்றில் வீழ்ந்து 4 வயது சிறுவன் பலி....
யாழ்ப்பாணம் - அராலி தெற்கு, வட்டுக்கோட்டையில் அயல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் அதே இடத்தைச் சேர்ந்த சசிகரன் சுதர்சன் எனவும், இவர் முன்பள்ளியில் கல்விகற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவனது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிணற்றில் வீழ்ந்து 4 வயது சிறுவன் பலி....
Reviewed by Author
on
April 08, 2016
Rating:

No comments:
Post a Comment