அண்மைய செய்திகள்

recent
-

"இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை" பிரித்தானியப் பாரளுமன்றில் தொழில்கட்சிக்கும், தமிழர்களுக்குமான ஒன்று கூடல்!


பிரித்தானியத் தொழில்கட்சிக்கும், பிரித்தானியத் தமிழர்களுக்குமிடையிலான ஒன்று கூடல் ஒன்று எதிர்வரும் 11ஆம் திகதி பிரித்தானியப் பாரளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.
Boothroyd Room, Portcullis House @ Parliament எனும் இடத்தில் நடைபெறவுள்ள இவ் ஒன்றுகூடலில் பிரதம விருந்தினராக தொழில்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய அமைச்சர் ஜெறமி கோபன் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன், கெளரவ விருந்தினராக நிழல் வெளிவிவகார அமைச்சர் கிலாரி பென், கலந்துகொள்ளவுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை எனும் தலைப்பில் நடைபெறவுள்ள இவ் ஒன்றுகூடலில் பிரான்ஸிஸ் ஹறிஷன், ஷோனியா ஸ்கீட்ஸ், கலும் மக்றே, DR. சுதா நடராஜா ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

அத்தோடு 20 க்கும் மேற்பட்ட தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் தொண்டு நிறுவன பிரதினிதிகள் என பலர் இவ் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை" பிரித்தானியப் பாரளுமன்றில் தொழில்கட்சிக்கும், தமிழர்களுக்குமான ஒன்று கூடல்! Reviewed by Author on April 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.