அண்மைய செய்திகள்

recent
-

குப்பை கொட்டுவதில் முன்னேறிய இலங்கை!



பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை கடலில் கொட்டும் நாடுகள் பட்டியலில் 20 நாடுகள் அடங்குவதாகவும், இதில் 5வது இடத்தில் இலங்கை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

'international business times'என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலமே குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் அதிகாரி ரவீந்த்ர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நிறுவனமானது, 192 நாடுகளை மையப்படுத்தி இந்த ஆய்வினை மேற்கொண்டதாகவும், இதில் முதலாவது இடத்தை சீனாவும், இரண்டாவது இடத்தை இந்தியாவும், மூன்றாம், நான்காம் இடங்களை முறையே பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை ஒரு வருடத்தில் மாத்திரம் 1.59 மெட்ரிக் தொன் கழிவினை கடலில் கொட்டுவதாக குறித்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் உள்ள நபர் ஒருவர் நாளொன்றுக்கு 5.1 கிலோ கிராம் குப்பையினை கடலில் இடுவதாகவும், இதில் பிளாஸ்டிக் கழிவுகள் 300 கிராம் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் கழிவுகளை அகற்றுவதற்கான சரியான நடவடிக்கை இல்லை என்றும், நாளுக்கு நாள் கழிவுகள் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் ரவீந்த்ர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் எழுந்துள்ள குப்பை பிரச்சினையானது பாதாள உலகத் தலைவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பு என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இதன் காரணமாகவே குப்பைகளை அகற்றுவதற்கு சிறந்த திட்டம் ஒன்று கடந்த டிசம்பர் மாதம் கொண்டு வருமாறு ஆர்ப்பாட்டம் நடத்திய மீதொட்டுமுல்ல பிரதேச வாசிகள் தாக்கப்பட்டமையானது குறித்த வருமானம் தடைப்படலாம் என்ற அச்சத்தினாலேயே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


குப்பை கொட்டுவதில் முன்னேறிய இலங்கை! Reviewed by Author on April 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.