எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு நாட்டில் எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி உண்டு : மஹிந்த சமரசிங்க
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சியில் இருக்கக் கூடிய இராணுவ முகாமிற்கு பலவந்தமாக சென்றதாக அனைவர் மத்தியிலும் பேசப்படுகின்றது.
இரா.சம்பந்தன் ஒரு முதிர்ந்த அரசியல் வாதி இவருக்கு நாட்டில் எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி உண்டு. அவர் எங்கு சென்றாலும் தடைவிதிக்க முடியாது. என இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இராணுவமுகாம்கள் மற்றும் வேறு சில முக்கியமான இடங்களிற்க்கு செல்லும் போதும் முன் அறிவிப்பு விடுக்க வேண்டும் எனவும் அதற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆனால் முன் ஏற்பாடுகள் எதுவும் இன்றி சம்பந்தன் கிளிநொச்சி இராணுவ முகாமிற்கு சென்றுள்ளார்.
அப்போது, பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது என அமைச்சர் தெரிவத்தார்.
மேலும், எமது நாடானது 30 வருட கொடூர யுத்தத்தில் இருந்து மீண்டுள்ளது. எனினும் கடந்த 7 வருடமாகத்தான் நாட்டு மக்கள் ஓரளவு நிம்மதியுடன் வாழ்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
யுத்தம் இடம் பெற்ற இடங்களில் இருந்து உடனடியாக இராணுவத்தினரை அகற்ற முடியாது. பகுதி பகுதியாகவே இரணுவத்தினரை அகற்ற முடியும்.
எதிர் கட்சி தலைவரின் இவ்வாறான செயற்பாடு, நாட்டில் உள்ள இனவாதிகளுக்கு கருத்து பதிவதற்கான ஓர் சந்தர்ப்பமாக அமைகின்றது எனவும் அவ்வாறான கருத்துக்கு இடமளிக்காது செயற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு எனவும் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு நாட்டில் எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி உண்டு : மஹிந்த சமரசிங்க
Reviewed by Author
on
April 25, 2016
Rating:

No comments:
Post a Comment