மன்னார் மண்ணில் அதிசயச்சிறுவன் வாழ்கிறான்..... (இதயத்துடன்-எல்லா உறுப்புக்களுமே இடம் மாறியுள்ளது)---முழுமையான படங்களுடன்
மன்னார்மண்ணில் அதிசயச்சிறுவன் வாழ்கிறான் எல்லா உறுப்புக்களுமே இடம் மாறியுள்ளது…..!!!!
பல அதிசயங்களை ஆச்சரியங்களை படித்திருக்கிறோம் வெளிநாடுகளில் எமது வெளிமாவட்டங்களில் ஆனால் முதற்தடவையாக எமது மன்னார் மண்ணில் ஆச்சரியமான பிறப்போடு பிறந்து வாழ்ந்து வருகின்றான் A.அன்ரியானோ என்ன.... நம்ப முடியவில்லையா…..!!!!
இதோ உங்களுக்காக….
மன்னார் எமில் நகர் ஜிம்றோன் கிராமத்தில் R-அன்ரனி பெர்னாண்டோ(டிலுக்ஷன்) நிதர்ஷினி பெற்றோருக்கு இரண்டாவது பிள்ளையாக பிறந்தவன் தான் நமது அதிசயச்சிறுவன் A.அன்ரியானோ 3 அரை வயதுச்சிறுவன். சரியப்பா.... என்ன அதிசயம் அதைச்சொல்லுங்க முதலில் என்று கேட்பது எனக்கு புரிகிறது…
ஆதிசயம் தான் எமக்கெல்லாம் இதயம் இடதுபக்கம் இருக்கும் இதயம் இவனுக்கு வலது பக்கம் உள்ளது. இவன் தனது சகோதரி ஆன்பிபாஷாவோடும் தான்படிக்கின்ற டிலாசால் கிட்கம்பஸ் சிறுவர்களோடும் ஏனைய சிறுவர்களோடும் இயல்பாகத்தான் ஓடியாடி விளையாடுகின்றான் நடனமாடுகின்றான் எமக்குத்தான் பயமாகவுள்ளது….
ஏன்பயப்படுகின்றீர்கள் இந்த விடையம் பிறக்கும் போதே தெரியுமா….
இல்லை இல்லை சமீபத்தில் 03-03-2016 சளிக்கு மருந்தெடுக்கப்போகும் போது தான் மன்னார் பொதுவைத்தியசாலையில் இவனுக்கு சளி அதிகமாகவுள்ளது என்று எக்ஸ்ரே எடுத்தார்கள் அப்போது நான் அருகில் நிற்கிறேன் எக்ஸ்ரே றிப்போர்ட்டை எடுத்த வைத்தியர் வியந்து போனார. மற்ற வைத்தியரிடம் எக்ஸ்ரே றிப்போர்ட்டை காட்டி றைட்-லெப்ட் என்று சொல்வது மட்டும் தான் எனக்கு விளங்குகின்றது.
ஆம் வைத்தியர்கள் சிங்கள மொழியில் பேசியதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்னை பார்த்த வைத்தியர் இவ்வாறு கூறினார் உங்களது மகனுக்கு இதயம் வலது பக்கமாகவுள்ளது என்று. நான் வியப்படையவில்லை பயந்து போனேன் எதாவது பிரச்சினையா ஒன்றும் பயப்படதேவையில்லை இவ்வாறு நடப்பது தான் இலட்சத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கும் ஆனால் எந்த வித மாற்றமும் இல்லை பயப்படவும் தேவையில்லை என்றார்கள்…
இருப்பினும் இவ்வளவு காலமும் அதாவது 3 அரை வயது வரை தெரியவில்லை எல்லோருக்கும் இடது பக்கம் தான் இருக்கும் அதனால் பெரிதுபடுத்தவில்லை இந்த முறைதான் ஸ்கான் றிப்போட்டை பார்த்த போது எதேச்சையாகத்தான் கண்டுபிடித்துள்ளார்கள்.
பெற்றோராகிய உங்களின் மன நிலை என்ன----
எங்களை பொறுத்த வரையில் எமது மகனுக்கு எந்த வித பாதிப்பில்லாமல் இருக்கிறான். அதுவே போதும் நாங்கள் இவனது பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் இவ்விடையத்தை தெரியப்படத்தியுள்ளோம் உங்கள் இணையம் மூலமாகவும் மக்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம் காரணம் எனது மகனின் பாதுகாப்பிற்காகவே இருப்பினும் வைத்தியர்களின் கருத்து எமக்கு இன்னும் வியப்பினையும் பயத்தினையும் ஏற்படுத்தியுள்ளது…
அப்படி என்ன வைத்தியர்கள் சொன்னார்கள்-----
எமது மகனுக்கு இதயம் மட்டுமல்ல ஏனைய உறுப்புக்களும் அதாவது வயிறு-நுரையீரல் ஏனையவையும் மாறியிருக்கலாம் என்று சந்தேகம் கொள்கின்றார்கள் அதனால் நாம் மிகுந்த பயத்துடன் தான் உள்ளோம். அதனால் எமது மகனை முழுமையான ஸ்கான் எடுத்துப்பார்க்க வேண்டும் அதேவேளை எதாவது சொல்லி விடுவார்களோ என்று பயமாகவுள்ளது…
இவ்விடையம் தொடர்பாக மன்னார் பொதுவைத்தியசாலையில் மார்பு நோய் சிகிச்சைப்பிரிவில் பணிபுரியும் மருத்துவர் U.M.அன்சலா அவர்களிடம் வினாவியபோது…..
மன்னார் மாவட்டத்தின் முதற்தடவையான இச்சம்பவம் அமைந்துள்ளது. எனது மருத்துவத்துறையில் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கும் போது கண்டு கொண்ட பின்பு 16 வருடங்களுக்கு பிறகு இப்படியான விடையத்தினை அறிகிறேன் பார்த்தேன் அதுவும் எமது மன்னார் மண்ணில் எனும் போது ஆச்சரியம் தான்
இதயம் வலது பக்கம் இருக்கின்றதே என்ன காரணம்…
அந்தச்சிறுவனை சளி என்று தான் கொணர்ந்தார்கள் அப்போது நான் செக்கப் செய்து விட்டு மார்பு நோய்சிகிச்சைப்பிரிவு நிபுணர் வைத்திய கலாநிதி சமிந்த அவர்களிடம் அனுப்பினேன். அவர் எக்ஸ்ரே றிப்போர்ட்டைப்பார்த்து விட்டு வியந்து போனார் என்னை அழைத்து எக்ஸ்ரே றிப்போர்ட்டை காட்டியபோது நானும் வியந்து போனேன். என்ன Sir இது இப்படி இருக்கு மருத்துவத்துறையில் இது நிகழ்வது இலட்சத்தில் ஒருவருக்குத்தான் அதுவும் பல வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்வது தான் என்றார் ஆனால் பயப்படத்தேவையில்லை எந்தப்பிரச்சினையும் இல்லை என்றார்…
இதயம் மட்டும் தானா இடமாறியுள்ளது…..
இல்லை.... ஒரு மனிதனுக்கு மிக முக்கியமாக இதயம்-ஈரல்-வயிறு இம்மூன்றும் மிகவும் முக்கியமானது இம்மூன்றுமே இச்சிறுவனுக்கு மாறித்தான் உள்ளது.....
- இதயமும் வயிறும் இடது பக்கம் தான் இயல்பாக எல்லோருக்கும் இருக்கும் இவனுக்கு வலது பக்கம் உள்ளது.
- ஈரல் வலது பக்கம் தான் இயல்பாக எல்லோருக்கும் இருக்கும் இவனுக்கு இடது பக்கம் உள்ளது.
- பித்தப்பை வலது பக்கம் இயல்பாக எல்லோருக்கும் இருக்கும் இவனுக்கு இடது பக்கம் உள்ளது.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு மருத்துவ தீர்வு எப்படி அமையும்….
மருத்துவத்துறையில் நாளுக்குநாள் பலவகையான அதிசயங்கள் நிகந்த வண்ணம் தான் உள்ளது இப்படியான விடையங்களுக்கு தீர்வு என்பது நவீனவிஞ்ஞானத்தின் கையில் தன் உள்ளது. இவனது உடலில் உறுப்புக்கள் மாறியுள்ளதால் செயற்பாடுகளும் மாறியுள்ளது. நுரையீரலில் வடிகட்டல் இயல்பு மாறியிருப்பதால் இந்தச்சளிப்பிரச்சினையுள்ளது அதுவும் சாதாரண நிலையில் தான் உள்ளது. இவன் வளர்ந்து பெரியவனாக வரும் போது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்.
அதுவும் மருத்துவத்துறையில் பாரிய கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்த வண்ணம் இருப்பதால் எந்தப்பயமும் தேவையில்லை ஏனெனில் இவனுக்கு இப்போது தான் மூன்றரை வயது இச்சிறுவன் 18-20 வயதை எட்டும் போது தான் மாற்றங்களை உணர்வான் மருத்துவத்தின் மூலம் சரிசெய்து விடலாம் தற்போது மற்ற மனிதர்களைப்போல் இயல்பாக இருப்பான் எந்தப்பயமும் இல்லை ஏனெனில் இச்சிறுவனைப்போல் இப்பூமியில் பலர் வாழ்ந்து வருகின்றனர்…..
மருத்துவத்துiயில் இப்பிறப்பு மகத்தானதே…..
மேலதிக தொடர்புகளுக்கு இச்சிறுவனின் தந்தையான R-அன்ரனி பெர்னாண்டோ
தொலைபேசி இலக்கம்-0778401278
நியூ மன்னார் இணையத்திற்காக
வை.கஜேந்திரன்
மன்னார் மண்ணில் அதிசயச்சிறுவன் வாழ்கிறான்..... (இதயத்துடன்-எல்லா உறுப்புக்களுமே இடம் மாறியுள்ளது)---முழுமையான படங்களுடன்
Reviewed by Author
on
April 02, 2016
Rating:

No comments:
Post a Comment