அண்மைய செய்திகள்

recent
-

துர்முகி வருடம் உங்களுக்கு எவ்வாறு அமைந்துள்ளது! முழு விபரம் இதோ....

மேஷம்
கடல் அலை ஓயாததைப்போல வாழ்க்கை என்றால் பிரச்னைகளும் இருக்கும் என்பதை உணர்ந்த நீங்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பீர்கள்.

உங்கள் ராசிநாதனான செவ்வாய் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் வலுவாக ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் தைரியம் பிறக்கும். தடைபட்ட காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும்.

வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குழப்பமான விஷயங்களில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.

சகோதரிக்கு நல்ல வரன் அமையும். சகோதரருக்கு வேலை கிடைக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

ஆனால், சனியுடன் சேர்ந்து நிற்பதால் அலர்ஜி, இரத்த அழுத்தம், முன்கோபம், இரத்தத்தில் சிவப்பணு குறைபாடுகளெல்லாம் வந்து செல்லும். உணவில் காய், கனிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களின் தனாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு மாறுவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும்.

இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிக்குள்ளேயே சூரியன் அமர்ந்திருப்பதுடன், 5ல் ராகுவும் நீடிப்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். புதனும் சாதகமாக இருப்பதால் நட்பு வட்டம் விரியும். பழைய கடனில் சிறு பகுதியை பைசல் செய்வீர்கள்.

அஷ்டமத்துச் சனி தொடர்வதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு அடைவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள். கேது லாப வீட்டில் தொடர்வதால் ஷேர் லாபம் தரும்.

மாணவ, மாணவிகளே! பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ் சென்று வருவீர்கள்.

நுழைவுத் தேர்விற்கு ஆயத்தமாவீர்கள். குருபகவான் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள்.

ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன், அழகு சாதனப் பொருட்களால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களால் இருந்து வந்த பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

கடையை வேறு இடத்திற்கு மாற்றுவது, விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.

புது சலுகைகள் கிட்டும். சக ஊழியர்களின்ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்தப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித்தொல்லை குறையும். புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். இடையூறுகள் வந்தாலும் இடைவிடாத முயற்சியால் இலக்கை எட்டிப்பிடிக்கும் மாதமிது.

இராசியான திகதிகள்: ஏப்ரல் 14, 20, 21, 22, 23, 30, மே 1, 2, 8, 9, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் 24, 25 மற்றும் 26ந் தேதி மாலை 4 மணி வரை வேலைச்சுமை அதிகரிக்கும்.

ரிஷபம்

எப்போதும் வாழ்வில் எதிர்நீச்சல் போடும் நீங்கள், வறுமையைக் கண்டு பயப்பட மாட்டீர்கள். யாராக இருந்தாலும் நியாயத்தைப் பேசும் நீங்கள், பழிபாவத்திற்கு அஞ்சுவீர்கள்.

இராசிநாதன் சுக்கிரனும், தனபூர்வ புண்யாதிபதி புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் போராட்டங்களை சளைக்காமல் எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி கிடைக்கும். இங்கிதமாக, இதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள்.

திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் நீண்ட நெடுநாட்களாக செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். சொந்த, பந்தங்கள் தேடி வருவார்கள்.

பூர்வீகச் சொத்தை புதுபிப்பீர்கள். நீண்டகால பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

உங்களின் சப்தமாதிபதியான செவ்வாய் 7ம் வீட்டிலேயே ஆட்சிபெற்று தொடர்வதால் ஒரு சொத்தை மாற்றி புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள்.

உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவர்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

ஆனால், 7ம் இடத்திலேயே சனியும் நீடிப்பதால் மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு பரிசோதனை செய்வது நல்லது. அவ்வப்போது சோர்வடைவார். ராகு, கேது மற்றும் குரு உங்களுக்கு சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

யாருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் உறுதிமொழி தர வேண்டாம். ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். கொஞ்சம் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள்.

உங்களின் சுகாதிபதியான சூரியன் உச்சம் பெற்று காணப்படுவதால் அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும்.

ஆனால், 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் தூக்கமில்லாமல் போகும். பெற்றோரின் உடல்நிலை பாதிக்கும்.

போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்னச் சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.

கன்னிப் பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். மாணவ மாணவிகளே! பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பழைய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். புது ஏஜென்சியை யோசித்து எடுக்கப் பாருங்கள்.

அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். கட்டிட உதிரி பாகங்கள், எலக்ரானிக்ஸ் வகைகள், சமையலறை சாதனங்கள் மூலமாக லாபம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் தலைமையுடன் மோதல் வரும். ஒருதலை பட்சமாக மூத்த அதிகாரி நடந்து கொள்கிறார் என்று நினைப்பீர்கள். மறைமுக அவமானங்கள் வரும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம்.

அதிகாரிகளை விமர்சித்தும் வெளிவட்டாரத்தில் பேச வேண்டாம். கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். விவசாயிகளே! பழுதான பம்பு செட்டை மாற்றுவீர்கள்.

கனி, கீரை வகைகளால் ஆதாயமடைவீர்கள். சின்னச் சின்ன ஏமாற்றங்கள், ஆரோக்கிய குறைவு, செலவினங்களை தந்தாலும் ஓரளவு நன்மைகளையும் தரும் மாதமிது.

இராசியான திகதிகள்: ஏப்ரல் 15, 16, 17, 18, 22, 25, மே 2, 3, 4, 5, 10, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் 26ந் திகதி மாலை 4 மணி முதல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வீண் விவாதங்கள் வந்துபோகும்.

மிதுனம்

சிறுவயதிலேயே சீர்திருத்த சிந்தனையையுடைய நீங்கள், அடிமைத்தனத்தையும், மூடப்போக்கையும் எதிர்த்து குரல் கொடுப்பீர்கள்.

ராகு வலுவாக 3ம் வீட்டிலேயே நிற்பதால் உங்களின் புகழ், கெளரவம் ஒருபடி உயரும். வி.ஐ.பிகளும் அறிமுகமாவார்கள்.

வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உறுதுணையாக இருப்பார்கள்.

சிலர் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் மூலமாகவும் பணம் வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

6ல் சனிபகவான் தொடர்வதால் வேற்று மதத்தை சார்ந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சுக்கிரனும், ராசிநாதன் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் குழந்தை பாக்கியம் உண்டு.

பூர்வீகச் சொத்தை விரிவுபடுத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.

மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். 3ல் குரு நீடிப்பதால் சிறுசிறு இழப்புகள், எதிலும் நாட்டமின்மை, காரிய தாமதம் வந்து செல்லும். அரசியல்வாதிகளே! மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

மேலிடத்தில் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

சிலருக்கு திருமணம் கூடி வரும். மாணவ, மாணவிகளே! புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நீச்சல் கற்றுக் கொள்வீர்கள்.

இசை, ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெறுவீர்கள். உங்கள் லாபாதிபதியான செவ்வாய் 6ம் வீட்டிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள்.

கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப இடமும் கிடைக்கும். புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள்.

புது கிளைகள் தொடங்குவீர்கள். அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய லைசென்ஸ் வந்து சேரும். புரோக்கரேஜ், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களின் உழைப்பை உணர்ந்துக் கொள்வார்கள்.

எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு உண்டு. கலைத்துறையினரே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். கலைத்திறன் வளரும். விவசாயிகளே! பக்கத்து நிலத்தையும் வாங்குமளவிற்கு வருமானம் உயரும். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள்.

திடீர் யோகங்களையும், அதிரடி முன்னேற்றங்களையும் சந்திக்கும் தரும் மாதமிது.

ராசியான திகதிகள்: ஏப்ரல் 15, 16, 17, 18, 19, 20, 25, 26, மே 4, 5, 6, 8, 13.

சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் 29, 30 ஆகிய திகதிகளில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

கடகம்

தானுண்டு தன் குடும்பமுண்டு என்று தன்னலத்துடன் வாழாமல், ஊர் வளர்ச்சியிலும் அக்கறை காட்டும் நீங்கள், அநீதியை தட்டிக்கேட்க தயங்க மாட்டீர்கள்.

கடந்த ஒரு மாத காலமாக 9ம் வீட்டில் அமர்ந்து தந்தையாருக்கு ஆரோக்கிய குறைவையும், தந்தையாருடன் மனத்தாங்கலையும், சேமிப்புகளையும் கரைத்து வந்த சூரியன் இப்போது 10ம் வீட்டில் வந்தமர்ந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கடினமான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை கூடும். மன இறுக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

வழக்குகள் சாதகமாகும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். நீண்ட நாட்களாக சந்தித்துப் பேச வேண்டுமென்று நினைத்திருந்த உறவினர், நண்பர்களை இந்த மாதத்தில் சந்தித்து மகிழ்வீர்கள்.

புதுவேலை கிடைக்கும். ஷேர் மூலமும் பணம் வரும். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் ஆட்சிபெற்று வலுவாக இருப்பதால் பழைய காலி மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள்.

உடன்பிறந்தவர்களுக்கு இருந்து வந்த பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

புண்ணிய தலங்களுக்கும் சென்று நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.

அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள்.

பழைய சுகமான அனுபவங்களில் மூழ்குவீர்கள். ராகு இரண்டிலும், கேது 8ம் இடத்திலும் தொடர்வதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். ஓய்வெடுக்க முடியாதபடி போகும்.

வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமை உங்களை நம்பி சில இரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும். கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் சேர்வீர்கள்.

பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும். மாணவ, மாணவிகளே! தன்னம்பிக்கை தரக்கூடிய நூல்களை படித்துத் தெளிவீர்கள்.

குரு 2ம் வீட்டில் தொடர்வதால் வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பங்குதாரரை மாற்றுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கடையை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலர் சொந்த கட்டிடத்திற்கே கடையை மாற்றுவீர்கள்.

கம்ப்யூட்டர், செல்போன், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சிலருக்கு வேறு நல்ல வாய்ப்பு வரும். சம்பளப் பாக்கியும் கைக்கு வரும்.

சிலர் பணியாற்றும் நிறுவனத்தை புதியவர்கள் வாங்க வாய்ப்பிருக்கிறது. புதிய உரிமையாளர்கள் மூலமாக உங்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். விவசாயிகளே! அடகிலிருந்த பத்திரங்களை மீட்க உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நிதானத்தால் நினைத்த காரியங்களை முடித்துக் காட்டும் மாதமிது.

ராசியான திகதிகள்: ஏப்ரல் 17, 18, 19, 20, 21, 27, 28, 30, மே 6, 8, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்: மே 1, 2 மற்றும் 3ந் திகதி காலை 8.30 மணி வரை பல வேலைகள் தடைபட்டு முடியும்.

சிம்மம்

அடக்குமுறையைக் கண்டு அஞ்சாமல் நியாயத்திற்காக போராடும் நீங்கள், யாருக்காகவும் கொண்ட கொள்கை, குறிக்கோள்களிலிருந்து பின்வாங்கமாட்டீர்கள்.

உங்களின் யோகாதிபதி செவ்வாய் பகவான் 4ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். முடங்கியிருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள்.

பார்த்தும் பார்க்காமல் சென்று கொண்டிருந்த வி.ஐ.பிகள் உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பார்கள். விற்க வேண்டுமென்று நினைத்திருந்த சொத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பேச்சிலே அனுபவ அறிவு வெளிப்படும். பழைய பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள்.

உறவினர்கள் மதிப்பார்கள். நட்பு வட்டம் விரியும். சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.

வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். உங்கள் ராசிநாதன் சூரியன் உச்சமாகி இருப்பது மனதில் தைரியம் பிறக்கும்.

ஆனால், தந்தைக்கு வேலைச்சுமை, மருத்துவச் செலவுகள் வந்து போகும். ஜென்ம குரு தொடர்வதால் தோலில் தடிப்பு, கட்டை விரலில் அடிபடுதல், பசியின்மை, எதிலும் ஈடுபாடற்ற நிலையெல்லாம் வந்து செல்லும்.

உங்களைப் பற்றிய அவதூறுகளை சிலர் பரப்பி விடுவார்கள். சிலர் உங்களை நேரில் பார்க்கும் போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி தவறாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள்.

வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் தாமதமாகி வரும். வாகனத்தில் செல்லும்போது மறவாமல் தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.

சிறுசிறு விபத்துகள் வந்து போகும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும்.

கன்னிப் பெண்களே! கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுங்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.

மாணவ, மாணவிகளே! பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.

எண்டர்பிரைசஸ், ஸ்பெகுலேஷன், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். அதிகாரிகளுடன் மோதல்கள் இருக்கதான் செய்யும்.

கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். விவசாயிகளே! விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.

மற்றவர்களின் பேச்சை கேட்டு கண்ட கண்ட உரங்களைப் பயன்படுத்தி நட்டப்படாதீர்கள். சுற்றுப்புற சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: ஏப்ரல் 14, 20, 21, 22, 23, 29, 30, மே 1, 2, 8, 9, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்: மே 3ந் தேதி காலை 8.30 மணி முதல் 4 மற்றும் 5ந் தேதி காலை 11.30 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது.

கன்னி

எதிரிக்கும் நல்லதே நினைக்கும் மனசு படைத்த நீங்கள், எப்போதும் ஒற்றுமை உணர்வுக்கு உரம் அளிப்பவர்கள்.

செவ்வாயும், சனியும் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். தன்னம்பிக்கையும் பிறக்கும்.

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

பதவிகள் தேடி வரும். சூரியன் இந்த மாதம் முழுக்க 8ம் வீட்டில் அமர்ந்திருப்பதுடன் 12ம் இடத்திலேயே ராகுவும், குருவும் தொடர்வதால் அடுக்கடுக்காக செலவுகள் இருக்கும்.

பணப்பற்றாக்குறை ஏற்படும். கைமாற்றாக கொஞ்சம் கடனும் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

பயணங்களின் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

கவனக்குறைவால் விலை உயர்ந்த ஆபரணங்கள், முக்கிய ஆவணங்களை இழந்து விடாதீர்கள். திடீர் பயணங்கள் இருக்கும்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

கல்யாணப் பேச்சு வார்த்தையும் சுமுகமாக முடியும். 6ல் கேது தொடர்ந்து கொண்டிருப்பதால் பங்குச்சந்தை லாபம் தரும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் சிலர் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகுங்கள். உட்கட்சி பூசல் வெடிக்கும்.

கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். மாணவ மாணவிகளே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுங்கள். விரும்பிய கல்விப் பிரிவில், எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.

வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பணியிலிருந்து விலகிச் சென்ற பழைய வேலையாள் மீண்டும் வந்து இணைவார்.

கடையை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்திற்கு மாற்றுவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். பெட்ரோகெமிக்கல், வாகன உதிரி பாகங்கள், மின்சார சாதனங்கள், சிமென்ட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சக ஊழியர்களும் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள்.

புது வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரே! ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உங்களுடைய படைப்புத் திறன் வளரும்.

விவசாயிகளே! விளைச்சல் அதிகரிப்பால் சந்தோஷமடைவீர்கள். நெல், கரும்பு, மஞ்சள் வகைகளால் லாபமடைவீர்கள்.

குறுகிய வட்டத்திலிருந்து விடுபட்டு வெற்றி பாதையை கண்டறியும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஏப்ரல் 14, 15, 16, 18, 22, 26, 27, 28, மே 4, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: மே 5ந் தேதி காலை 11.30 மணி முதல் 6 மற்றும் 7ந் தேதி மதியம் 2 மணி வரை புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும்.

துலாம்

எதிரிக்கும் நல்லதே நினைக்கும் மனசு படைத்த நீங்கள், எப்போதும் ஒற்றுமை உணர்வுக்கு உரம் அளிப்பவர்கள்.

செவ்வாயும், சனியும் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். தன்னம்பிக்கையும் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.

வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

வேற்றுமதத்தைச் சேர்ந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

பதவிகள் தேடி வரும். சூரியன் இந்த மாதம் முழுக்க 8ம் வீட்டில் அமர்ந்திருப்பதுடன் 12ம் இடத்திலேயே ராகுவும், குருவும் தொடர்வதால் அடுக்கடுக்காக செலவுகள் இருக்கும்.

பணப்பற்றாக்குறை ஏற்படும். கைமாற்றாக கொஞ்சம் கடனும் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

பயணங்களின்போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

கவனக்குறைவால் விலை உயர்ந்த ஆபரணங்கள், முக்கிய ஆவணங்களை இழந்து விடாதீர்கள். திடீர் பயணங்கள் இருக்கும்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

கல்யாணப் பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடியும். 6ல் கேது தொடர்ந்து கொண்டிருப்பதால் பங்குச்சந்தை லாபம் தரும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் சிலர் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகுங்கள். உட்கட்சி பூசல் வெடிக்கும்.

கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். மாணவ மாணவிகளே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுங்கள். விரும்பிய கல்விப் பிரிவில், எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.

வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பணியிலிருந்து விலகிச் சென்ற பழைய வேலையாள் மீண்டும் வந்து இணைவார்.

கடையை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்திற்கு மாற்றுவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். பெட்ரோகெமிக்கல், வாகன உதிரி பாகங்கள், மின்சார சாதனங்கள், சிமென்ட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சக ஊழியர்களும் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள்.

புது வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரே! ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உங்களுடைய படைப்புத் திறன் வளரும்.

விவசாயிகளே! விளைச்சல் அதிகரிப்பால் சந்தோஷமடைவீர்கள். நெல், கரும்பு, மஞ்சள் வகைகளால் லாபமடைவீர்கள். குறுகிய வட்டத்திலிருந்து விடுபட்டு வெற்றி பாதையை கண்டறியும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஏப்ரல் 14, 15, 16, 18, 22, 26, 27, 28, மே 4, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: மே 5ந் தேதி காலை 11.30 மணி முதல் 6 மற்றும் 7ந் தேதி மதியம் 2 மணி வரை புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும்.

விருச்சிகம்

நியாயமாக தனக்குக் கிடைக்க வேண்டியதைக் கூட சில நேரங்களில் விட்டுக் கொடுக்கும் நீங்கள் மற்றவர்களின் மீது அதிக பாசம் வைப்பீர்கள்.

கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து கொண்டு தூக்கமின்மையையும், பிள்ளைகளால் பிரச்சினைகளையும், அவர்களின் உயர்கல்வி, ஆரோக்கியம், திருமணம் இவற்றையெல்லாம் நினைத்து பயத்தையும் தந்து கொண்டிருந்த சூரியன் இந்த மாதம் முழுக்க 6ம் வீட்டில் அமர்வதால் பரபரப்பாக காணப்படுவீர்கள்.

இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். பிள்ளைகளின் கோபதாபங்கள் நீங்கும். அவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் தைரியமாக பெரிய முடிவுகளை எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

ஆனால், செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் வேலைச்சுமை, அலைச்சல், இரத்த அழுத்தம் வந்து செல்லும்.

26ந் தேதி முதல் சுக்கிரன் 6ம் வீட்டில் மறைவதால் வாகனம் அடிக்கடி பழுதாகும். வீடு பராமரிப்புச் செலவும் அதிகரிக்கும்.

கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இருவருக்குள்ளும் பிரச்சினையை உருவாக்க சிலர் முயற்சி செய்வார்கள்.

உங்கள் குடும்பத்தினரையோ, உறவினரையோ யாரேனும் ஏதேனும் தவறாக கூறினால் உடனே நம்பி விடாதீர்கள்.

அலைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும்.

புதனும் 6ல் மறைந்திருப்பதால் தொண்டை வலி, மூச்சுத் திணறல், நரம்புச் சுளுக்கு, உறவினர், நண்பர்களுடன் பகைமை வந்துபோகும்.

ஜென்மச் சனி தொடர்வதால் வீண் விரயம், ஏமாற்றம், நெஞ்சு வலி, அஜீரணப் பிரச்னை, அல்சர் வரக்கூடும்.

அரசியல்வாதிகளே! கட்சித் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும்.

பெற்றோரை கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.

மாணவ, மாணவிகளே! மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர போராட வேண்டியது வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.

பற்று வரவு சுமார்தான். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். வாடிக்கையாளர்களைக் கடிந்து கொள்ளாதீர்கள்.

பங்குதாரர்களுடன் அனுசரித்துப் போவது நல்லது. உணவு, கட்டிட உதிரி பாகங்கள், போர்ங், லாட்ஜிங் வகைகளால் லாபமடைவீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை இருக்கும். உங்களை விட வயதில் குறைவானவர்களிடம் நீங்கள் வளைந்து கொடுத்துப் போக வேண்டி வரும்.

சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினரே! உங்களுக்கு அலைச்சல், செலவுகள் இருக்கும். படைப்புகள் வெளியாவதில் தாமதம் உண்டாகும். விவசாயிகளே! தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் குறைய வாய்ப்பிருக்கிறது.

உணர்ச்சி வசப்படாமல் உள்மனசு சொல்வதை உள்வாங்கி செயல்படவேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: ஏப்ரல் 17, 18, 19, 20, 21, 27, 28, 29, 30, மே 6, 7, 8.

சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் 14ந் தேதி மதியம் 2 மணி வரை மற்றும் மே 9ந் தேதி மாலை 4.30 மணி முதல் 10, 11 ஆகிய தேதிகளில் எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள்.

தனுசு

சண்டையை விரும்பாத நீங்கள் பெரிய மனிதர்களின் தவறுகளை, இரகசியங்களை அம்பலப்படுத்துவதில் வல்லவர்கள்.

என்றும் ஏழையின் கண்ணீரை துடைப்பவர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். நட்பு வட்டம் விரியும்.

திடீர் பயணங்கள் இருக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.

சூரியன் 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்க்க வேண்டுமென்ற கவலைகள் வந்து போகும்.

மகனுக்கு முன்கோபம் அதிகரிக்கும். மகள் உங்களை தவறாகப் புரிந்து கொள்வார். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். உறவினர்களில் ஒருசிலர் நன்றி மறந்து நடந்து கொள்வார்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

செவ்வாய் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதாலும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதாலும் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பேசித் தீர்ப்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சிலர் வீடு மாறுவீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால் அவ்வப்போது பணப் பற்றாக்குறை ஏற்படும்.

சில நேரங்களில் கைமாற்றாக வெளியில் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சொன்னபடி சொன்ன நேரத்தில் வாங்கிய பணத்தை திருப்பித் தர முடியவில்லையே என்று சில நேரங்களில் ஆதங்கப்படுவீர்கள்.

அலுத்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும்.

மாணவ, மாணவிகளே! நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள்.

பழைய நண்பர்களுடன் இனிமையான அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.

உயர்கல்வியை தொடர்வதற்கு முன்பே சரியான பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ராசிநாதன் குரு 9ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும்.

மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங் களுக்கு முன்னிலை வகிப்பீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவருவீர்கள். உணவு, ரியல் எஸ்டேட், கெமிக்கல், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். சக ஊழியர்கள் மத்தியில் உங்களுடைய கருத்திற்கு ஆதரவு பெருகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும். விவசாயிகளே! உங்களின் கடுமையான உழைப்பிற்கு ஏற்ப மகசூல் கூடும். நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஏப்ரல் 20, 21, 22, 23, 30, மே 1, 2, 8, 9, 10.

சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் 14ந் தேதி மதியம் 2 மணி முதல் 15, 16ந் தேதி இரவு 9 மணி வரை மற்றும் மே 12, 13 ஆகிய தேதிகளில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மகரம்

போட்டியென வந்து விட்டால் புலியாக மாறும் நீங்கள், தொடங்கிய வேலையை முடிக்கும்வரை ஓய மாட்டீர்கள்.

உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

வி.ஐ.பிகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதைச்செய்து முன்னேறுவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள்.

தவணை முறையில் பணம் செலுத்தி புதுவாகனம் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

நண்பர் வீட்டு திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும்.

எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் கூடும். வீடு கட்டுவதற்கு லோன் கிடைக்கும். எம்.எம்.டி.ஏ., சி.எம்.டி.ஏ அப்ரூவலாகி வரும்.

சகோதரிக்கு திருமணம் கூடிவரும். செவ்வாயும், சனியும் வலுவாக இருப்பதால் தாயாருக்கு இருந்து வந்த ஆரோக்யக் குறைவு நீங்கும்.

தாய்வழிச் சொத்து கைக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். முன்பணம் தந்து முடிக்காமல் இருந்த வீடு, மனையை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

எதிர்பார்த்த விலைக்கு காலி கிரவுண்டை விற்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வகையில் ஆதரவு பெருகும். சூரியன் 4ம் வீட்டில் நிற்பதால் வீட்டை இடித்துக் கட்டுவது, மாற்றுவது போன்ற முடிவுக்கு வருவீர்கள்.

எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரருடன் பகைமை பாராட்ட வேண்டாம். வெளிநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும்.

கேது இரண்டிலும், ராகு 8ம் இடத்திலும் தொடர்வதால் ஏமாற்றம், எதிலும் ஆர்வமின்மை, பிறர் மீது நம்பிக்கையின்மை, மூச்சுப் பிடிப்பு வந்துபோகும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும்.

கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆதரவு பெருகும். மாணவ மாணவிகளே! நட்பு வட்டம் விரிவடையும். நீண்ட காலமாக சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம்.

புதியவர்களை நம்பி எந்த முதலீடும் செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து போகும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும்.

மேலதிகாரியின் ஆலோசனையின்றி செயல்பட வேண்டாம். கலைத்துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்களால் உதவிகள் உண்டு. விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் சுமூகமான தீர்வு காண்பது நல்லது.

மாற்றுப் பயிரிட முயற்சி செய்யுங்கள். சூழ்ச்சிகளை முறியடித்து, விவேகமான முடிவுகளால் சாதித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஏப்ரல் 14, 15, 22, 25, 26, மே 2, 3, 4, 5, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் 16ந் தேதி இரவு 9 மணி முதல் 17, 18 மற்றும் 19ந் தேதி காலை 7.30 மணி வரை இனந்தெரியாத கவலைகள் வந்துபோகும்.

கும்பம்


தெளிந்த நீரோடை போல தீர்க்கமாக முடிவெடுக்கும் நீங்கள் யார் மனதும் புண்படாதபடி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருப்பீர்கள்.

உங்களின் பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வி.ஐ.பிகளும் பக்கபலமாக இருப்பார்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வீர்கள்.

உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த உரசல் போக்கு நீங்கும். நண்பர்கள் வலிய வந்து உதவுவார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். இழந்த பூர்வீகச் சொத்தை மீண்டும் பெறுவீர்கள்.

சூரியன் இந்த மாதம் முழுக்க 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் படபடப்பு குறையும். பக்குவமாகவும், இங்கிதமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள்.

அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் நல்ல விதத்தில் முடியும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். ஷேர் மூலமாகவும் பணம் வரும்.

மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 10ம் வீட்டில் செவ்வாய் நீடிப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

சகோதர வகையில் அனுகூலம் உண்டு. உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வேலைகிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

ஒரு சொத்தை விற்று மறுசொத்தை வாங்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள்.

ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் சின்னச் சின்ன இழப்புகள், எதிர் காலம் பற்றிய பயம், எதிலும் ஒருவித தடுமாற்றம், யூரினரி இன்ஃபெக்ஷன், குதிகால் வலி, உடம்பில் இரும்புச் சத்து குறைப்பாடுகளெல்லாம் வந்துபோகும். அரசியல்வாதிகளே! புது பொறுப்புகள் தேடி வரும்.

சகாக்கள் மதிப்பார்கள். கன்னிப் பெண்களே! உங்களின் கல்வித் தகுதிக்கேற்ப நல்லவேலை கிடைக்கும். தாயாருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். மாணவ, மாணவிகளே! பழைய நண்பர்களை தேடிப்பிடித்து பேசுவீர்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுக்கு முழு நேரம் ஒதுக்கி தயார்படுத்திக் கொள்ளுங்கள். குரு வலுவாக இருப்பதால் வியாபாரத்தில் தைரியமாக புது முதலீடுகள் செய்வீர்கள்.

இடைத்தரகர்களை நம்பி இனியும் ஏமாற வேண்டாம். முக்கிய வியாபார விஷயங்களை நீங்களே நேரில் சென்று பேசி முடிப்பது நல்லது. வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி லாபம் வரும்.

உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமையை மதிப்பார்கள். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும்.

உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள்.

விவசாயிகளே! அரசாங்க சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். போராட்டங்களை கடந்து புத்துயிர் பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஏப்ரல் 15, 16, 17, 18, 25, 26, 27, 28, 30, மே 4, 5, 6, 7, 8, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் 19ந் தேதி காலை 7.30 மணி முதல் 20 மற்றும் 21ந் தேதி இரவு 7.15 மணி வரை யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

மீனம்

மற்றவரின் மன ஓட்டத்தை நாடி பிடித்துப் பார்ப்பதில் வல்லவர்களான நீங்கள் எங்கும், எதிலும் அழகுணர்வையே விரும்புவீர்கள்.

கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து உங்களை கோபப்பட வைத்த, உணர்ச்சி வசப்பட்டு பேச வைத்த சூரியபகவான் இப்போது ராசிக்கு 2ல் அமர்ந்திருப்பதால் கோபம், வேலைச்சுமை குறையும்.

பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். ஆனால், கண், காது மற்றும் பல்வலி வந்துபோகும். உங்கள் தன பாக்கியாதிபதியான செவ்வாய் பகவான் ஆட்சிபெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்திருந்த பணம் வரும்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சகோதர, சகோதரிகள் உங்களை முழுமையாகப் புரிந்து கொள்வார்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்று மாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

மனைவி வழியில் உதவிகள் உண்டு. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தாயாரின் உடல்நிலை சீராகும்.

உங்கள் ராசிநாதன் குரு 6ல் நிற்பதால் செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போகும். அவ்வப்போது பணத்தட்டுப்பாடு ஏற்படும். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் பேசிக் கொண்டிருக்காதீர்கள்.

வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டு செல்வது நல்லது. தங்க நகைகளை பத்திரப்படுத்துங்கள்.

ராகுவும் வலுவாக 6ம் இடத்திலேயே தொடர்வதால் வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வீட்டில் நல்லது நடக்கும்.

கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும்.

மாணவ, மாணவிகளே! நீங்கள் எதிர்பார்த்தபடி தேர்வில் மதிப்பெண் வர வாய்ப்பிருக்கிறது.

விரும்பிய கல்விப் பிரிவில் சேருவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களுடைய புதிய திட்டங்கள் நிறைவேறும்.

அழகு, ஆரோக்கியம் கூடும். பேசாமல் இருந்து வந்த தோழி பேசுவார். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

தன்னம்பிக்கை பிறக்கும். விளம்பர யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள்.

புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். சங்கத்திலும் இடம் பிடிப்பீர்கள். பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள்.

உத்யோகத்தில் தொல்லை கொடுத்து வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். ஆனால், குரு 6ல் மறைந்திருப்பதால் உங்கள் பலவீனத்தை பயன்படுத்தி சிலர் தவறான வழியில் சம்பாதிக்க உங்களை தூண்டுவார்கள்.

அதற்கு உடன்படாதீர்கள். கூடாப்பழக்கமுள்ளவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு பரிசு, பாராட்டுகள் கிடைக்கும். விவசாயிகளே! புதிதாக நிலம் வாங்குமளவிற்கு வருமானம் உயரும். கிழங்கு, எண்ணெய் வித்துக்களால் லாபமடைவீர்கள். அச்சம் விலகி அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஏப்ரல் 14, 17, 18, 20, 27, 28, 29, 30, மே 6, 8, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் 21ந் தேதி இரவு 7.15 மணி முதல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.
 



துர்முகி வருடம் உங்களுக்கு எவ்வாறு அமைந்துள்ளது! முழு விபரம் இதோ.... Reviewed by Author on April 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.