அண்மைய செய்திகள்

recent
-

தூக்கத்தில் உயிர் பிரிந்த உலகின் உயரமான மனிதர்! இறுதிச்சடங்கில் உருவான வினோத பிரச்சனை....


உலகின் மிக உயரமான மனிதர்களில் ஒருவர் இருதய நோயால் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செக் குடியரசின் ராஸ்கோஸ் நகரில் குடியிருந்து வந்த 38 வயதான தாமஸ் Pustina பல ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையிலேயே காலம் தள்ளி வந்தார்.

இந்நிலையில் சமீப காலமாக இருதயம் தொடர்பான நோயினால் அவதிப்பட்டு வந்த தாமஸ், கடுமையான மாரடைப்பு காரணமாக தூக்கத்திலேயே மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Salma Hayek கதாநாயகியாக நடித்திருந்தTale of Tale என்னும் படத்தில் தாமஸ் நடித்திருந்தார். 7 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட தாமசுக்கு திரைப்பட வாய்ப்பு கிடைப்பது எளிதாக இருந்தது,

ஆனால் இவரது உயரம் காரணமாக இறுதிச்சடங்கு நடத்துவதில் குடும்பத்தினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தாமசின் உயரத்திற்கு ஏற்ற சவப்பெட்டி தயார் செய்வது முதல் சடங்கிற்கு தேவையான அனைத்தும் முடிவு செய்வதில் குடும்பத்தினர் திணறியுள்ளனர்.

உடலை எரியூட்டுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வாரத்தில் ஒரு நாள் தாமசின் உடலை புதைக்க இருப்பதாய் அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

மிகவும் சாதாரண வளர்ச்சியுடன் காணப்பட்ட தாமசுக்கு தமது 14 வது வயதில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்து அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது.

இளைஞரானதும் செக் குடியரசின் மிகவும் உயரமான மனிதராக திகழ்ந்தார் தாமஸ். இவரது அளவுக்கு அதிகமான உயரம் சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத்தந்துள்ளது.

தூக்கத்தில் உயிர் பிரிந்த உலகின் உயரமான மனிதர்! இறுதிச்சடங்கில் உருவான வினோத பிரச்சனை.... Reviewed by Author on April 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.