காணாமற்போனோர் விசாரணைகள்! வடக்கில் இந்த மாதத்திற்குள் பூர்த்தி!- மக்ஸ்வல்....
காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வட மாகாணத்திற்கான விசாரணைகள் இந்த மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமென ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான விசாரணைகள் எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும், தொடர்ந்து மூன்று தினங்கள் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் எதிர் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவு பெறுவதினால் விசாரணைகளின் அறிக்கைகளை தயார் செய்ய வேண்டி இருப்பதினால் விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரனகம தெரிவித்தார்.

காணாமற்போனோர் விசாரணைகள்! வடக்கில் இந்த மாதத்திற்குள் பூர்த்தி!- மக்ஸ்வல்....
Reviewed by Author
on
April 15, 2016
Rating:

No comments:
Post a Comment