அண்மைய செய்திகள்

recent
-

பெற்றோரின் கவனக் குறைவால் சீரழியும் சிறுவர்கள் - மன்னார் சமூக ஆர்வலர்கள் விசனம்

பெற்றோர்களது கவனயீனத்தினால் எதிர்கால இளம் சமூதாயம் சீரழிந்து விடுமோ” என்ற நிலை வலுப்படுவதை தடுக்க அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்பது அவசியம் என மன்னார் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு உதாரணமாக மன்னார் - தாழ்வுபாடு வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவிற்கு சற்று தொலைவில் அமைந்துள்ள வீதிக்கு அருகாமையில் கள்ளுத்தவறணைக்கு கள்ளு குடிக்க வந்த உறவினர் ஒருவர் கள்ளுத்தவறணைக்கு சிறுவன் ஒருவரை கூட்டிச்சென்ற சம்பவம் ஒன்றை முன்வைக்கின்றார்கள்.

குறித்த சம்பவம் கடந்த 3ம் திகதி மன்னார் டிப்போ அமைந்துள்ள பகுதிக்கு சற்று தொலைவில் உள்ள கள்ளுத்தவறணையில் இடம்பெற்றுள்ளது.

உறவினர் ஒருவர் சிறுவனை கள்ளுத்தவறணையில் மோட்டார் சைக்களில் இருத்திவிட்டு கள்ளு குடிக்கச் சென்றுள்ளார்.

சிறுவனை அழைத்துவந்த உறவினர் கள்ளு குடித்துவிட்டு வரும்வரை சிறுவன் குறித்த மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு கள்ளு குடிக்க வருபவரின் செயற்பாடுகளை பார்த்தவண்ணம் இருந்துள்ளார்.

அதனை அவதானித்த சமூக ஆர்வலர்கள் சிறுவனின் நிலைகுறித்து கவலையடைந்துள்ளனர்.

பெற்றோரின் கவனக்குறைவே அதற்கான காரணம் என தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், தமது குழந்தைகள் தொடர்பில் பெற்றோர் கவனம் செலுத்துவதுடன் சிறுவயதிலேயே அவ்வாறான இடங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்வதால் இளம்சமூகம் சீரழிந்து செல்லும் நிலை உருவாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வேண்டுகோள்விடுக்கின்றனர்.
பெற்றோரின் கவனக் குறைவால் சீரழியும் சிறுவர்கள் - மன்னார் சமூக ஆர்வலர்கள் விசனம் Reviewed by NEWMANNAR on April 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.