தமிழ் மக்களின் கலாசாரத்தை அழிக்கும் சதி தொடர்கிறது: எச்சரிக்கும் சார்ள்ஸ் நிர்மலாநாதன்
தமிழ் மக்களின் கலாசாரத்தை திட்டமிட்டு சீரழிக்கும் நடவடிக்கைகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் முன்னெடக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் தமிழ் மக்கள் மிகவும்அவதானமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், நல்லாட்சி என்ற சொல்லை மாத்திரம் பயன்படுத்திக்கொண்டு தமிழ் மக்களை தொடர்ந்தும் ஆட்சியில் உள்ளவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டு அவையவங்களை இழந்த குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்றைய தினம் முல்லைத்தீவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட உடையார்கட்டு வடக்கு கிராமசேவையாளர் பிரிவின் முங்கிலாறு வடக்கு கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் அமைக்கப்பட்ட நுால் நிலையக் கட்டிடத்தை திறந்துவைத்தார்.

இதன்போது போரினால் பெற்றோர்களை இழந்த மற்றும் விசேட தேவையுடைய பிள்ளைகள் 80 பேருக்கு சுவிஸ்வாழ் பிரஜையொருவர் வழங்கிய கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களை தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருக்கவே முயல்வதாக குற்றம்சாட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எனினும் தற்போதைய அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள இறுதி சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுட்காட்டினார்.

Reviewed by NEWMANNAR
on
April 16, 2016
Rating:

No comments:
Post a Comment