அண்மைய செய்திகள்

recent
-

24 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் யுனைடெட் ....


எப்.ஏ கிண்ண உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

24 ஆண்டுகளுக்கு பிறகு மான்செஸ்டர் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் கிளப் உதைபந்து அணிகளுக்கான பிரிமியர் லீக் போட்டி பிரபலம் வாய்ந்தது. 2015-16-ம் ஆண்டுக்கான போட்டியில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன.

இங்கிலாந்தின் பல்வேறு பகுதியில் பிரிமியர் லீக் உதைபந்து தொடர் நடக்கிறது. இதில் வெம்ப்லிநகரில் நடைபெற்ற இறுதி போட்டியில் கிறிஸ்டல் பேலஸ், மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டியில் சம நிலை எற்பட்டது, இரண்டாவது பாதி 78வது நிமிடத்தில் கிறிஸ்டல் போலஸ் அணி வீரர் Jason Puncheon கோல் அடித்தார்.

இதன் மூலம் கிறிஸ்டல் பேலஸ் அணி முன்நிலை பெற்றது, இதைத்தொடர்ந்து 81வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர் Juan Mata கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி கடுமையான நிலையில், 110 நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர் Jesse Lingard கோல் அடித்து மான்செஸ்டர் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார்

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்று எப்.ஏ கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.



24 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் யுனைடெட் .... Reviewed by Author on May 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.