31 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை...
சீனாவில் அரியவகை பிறப்புக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையொன்று கைகளில் 15 விரல்களுடனும், கால்களில் 16 விரல்களுடனும் பிறந்துள்ளது.
சீனாவின் ஹனான் மாகாணத்தை சேர்ந்த தம்பதியினருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அழகான குழந்தையொன்று பிறந்துள்ளது.
குழந்தையை பார்த்தவுடனேயே பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர், கைகளில் 15 விரல்களுடனும், கால்களில் 16 விரல்களுடனும் பிறந்துள்ளது.
இக்குழந்தைக்கு Hong Hong என பெயர் சூட்டியுள்ளனர், Polydactylism என்ற அரிய வகை பிறப்புக் குறைபாடே இதற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குறைபாடு இவரது தாயிடமிருந்தே வந்துள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர், இவருக்கு கை, கால்களில் 12 விரல்கள் மட்டுமே உள்ளது.
குழந்தைக்கு குறைந்தது வயது ஆறு மாதங்களாவது ஆகும் பட்சத்தில் தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் எனவும், 30,000 டொலர் வரை செலவாகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இணையதளம் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் பணம் சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
Polydactylism என்னும் அரிய பிறப்பு குறைபாடு மனிதர்கள் மற்றும் விலங்குகளில் தோன்றும் எனவும், 1000 குழந்தைகளில் 1 குழந்தை இந்நோயால் பாதிக்கப்படும் எனவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
31 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை...
Reviewed by Author
on
May 06, 2016
Rating:

No comments:
Post a Comment