10 கிளைமோர், 66 கைக்குண்டுகள் கிளிநொச்சி இரத்தினபுரத்தில் மீட்பு....
கிளிநொச்சி இரத்தினபுரம் 3 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து 10 கிளைமோர் குண்டுகள், 66 கைக் குண்டுகள் மற்றும் 42 மோட்டார் பியுஸ் என்பவற்றை 57 ஆம் படைப் பிரிவினரின் குண்டு செயலிழக் கும் பிரிவினர் மீட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் சுமார் 12 மணியளவில் 57ஆம் படைப்பிரிவினர் குறித்த தேடுதலை ஆரம்பித்து பிற்பகல் 5.30 மணியளவில் முடிவுக்கு கொண்டு வந்தனர்
இந்த சம்பவம் பற்றி மேலும் தெரிய வரு வதாவது,
குறித்த வீட்டின் உரிமையாளர் இல்லாத நிலையில் வீட்டைப் பராமரிக்கும் நபர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிணறு இறை க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன்போது ஒரு கிளைமோர் குண்டு கிணற்றில் இருப்பதை கண்டு கிணறு இறைக்கும் பணியை கைவிட்டதுடன் 57ஆம் படைப் பிரிவினரிடம் தகவல் வழங்கி உள்ளார் .
எனினும் கடந்த சில நாட்களாக கிளிநொச்சி பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையால் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ள நேரத்தி லேயே இராணுவத்தினர் தமது தேடுதலை முன்னெடுத்துள்ளார்கள்.
இதன்படி நேற்று 12 மணியளவில் ஆரம்பித்து 12.5 கிலோக்கிராம் கிளைமோர் குண்டு 01, 7.5 கிலோக்கிராம் கிளைமோர் குண் டுகள் 3,2.5 கிலோக்கிராம் கிளைமோர் குண்டுகள் 6 உள்ளடங்கலாக 10 கிளைமோர் குண்டுகளும், 66 கைக்குண்டுகள் மற்றும் 42 மோட்டார் பியுஸ்களும் மாலை 5.30 மணிவரைக்கும் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது
அத்தோடு தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதி மறுக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் முடிவுற்ற பின்பு மீட்கப்பட்ட வெடி பொருட்களை புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மீட்கப்பட்ட வெடிபொருட்களின் முழுமையான விபரங்கள் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
10 கிளைமோர், 66 கைக்குண்டுகள் கிளிநொச்சி இரத்தினபுரத்தில் மீட்பு....
Reviewed by Author
on
May 31, 2016
Rating:

No comments:
Post a Comment