தீவிரவாத சட்டத்தை ரத்து செய்வதாக இலங்கை அரசு வாக்குறுதி அளிக்கவில்லை: ஐ.நா விசேட பிரதிநிதி
தீவிரவாத ஒழிப்புச் சட்டத்தை ரத்து செய்வதாக இலங்கை அரசினால் எந்தவொரு உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கிறார்.
இலங்கை அரசு தீவிரவாத ஒழிப்புச் சட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளித்ததாக கூறப்படும் கருத்து முற்றிலும் பொய்யான கருத்தென ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி கூறுகிறார்.
இலங்கை அரசின் விசேட அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்த குறித்த பிரதிநிதி, வொஷிங்டன் நகரில் ஊடகவியலாளர் ஒருவருடனான விசேட நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டபோதே மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.
குறித்த நேர்காணல் பிரபல ஒளிபரப்பு நிலையமொன்றின் வாராந்த செய்திச் சேவையில் ஒளிபரப்பாகியிருந்தது.
அந்நேர்காணலின்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை அரசின் மேல்மட்ட அதிகாரிகள் தீவிரவாத ஒழிப்புச் சட்டத்தை கருத்திற்கொண்டு செயற்படுவதாக தெரிவித்தார்.
இது சாதாரண வாய்ச்சவாடல் மாத்திரமே. இதுதவிர குறித்த சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாகவோ, சீர்திருத்தம் செய்யவோ அல்லது குறித்த சட்டம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த வகையில் எதிர்பார்க்கிறார்கள் என்ற எந்தவொரு வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றார்.
மேற்படி விசேட பிரதிநிதியின் கருத்தின் படி, இலங்கையின் அதிமுக்கிய அரச நிறுவனங்களில் கடும் புனர்நிர்மாணம் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
விசேடமாக பொலிஸ் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் அதேபோல் நீதிமன்றம் ஆகிய பிரபல நிறுவனங்களில் மாற்றமொன்று வெகுவிரைவில் ஏற்பட வேண்டும்.
அப்படியேற்பட்டால் குறித்த நிறுவனங்களினூடாக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளின் அளவு அதிகரிக்கும் என்பது திண்ணம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
தீவிரவாத சட்டத்தை ரத்து செய்வதாக இலங்கை அரசு வாக்குறுதி அளிக்கவில்லை: ஐ.நா விசேட பிரதிநிதி
Reviewed by Author
on
May 21, 2016
Rating:

No comments:
Post a Comment