எவரஸ்ட்டில் ஏறி சாதனை படைத்த ஜெயர்திக்கு பிரதமர் வாழ்த்து....
எவரஸ்ட் மலை உச்சியில் இலங்கையின் தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றி வைத்த பெண் என்ற பெருமைக்குரிய ஜெயர்தி குரு உதும்பாலவுக்கு இலங்கை மக்கள் அனைவரினது சார்பிலும் நல்வாழ்த்துக்களை கூறுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெயர்தியுடன் சேர்ந்து இந்த சவாலை வெற்றி கொள்வதற்கு அவருடன் இணைந்து கொண்ட யொஹான் பீரிஸ்சுக்கும் இந்த சவாலை வெற்றி கொள்ள சக்தியும் தைரியமும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்பதாக பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தை அடைந்து ஜெயர்தி குரு உதும்பால என்ற இலங்கைப் பெண்மணி இன்று (21) காலை சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவரஸ்ட்டில் ஏறி சாதனை படைத்த ஜெயர்திக்கு பிரதமர் வாழ்த்து....
Reviewed by Author
on
May 21, 2016
Rating:

No comments:
Post a Comment