சிறுவர்களுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் தொல்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்....
பிரித்தானியாவில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் வியத்தகு அளவில் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரங்களில் 2012 முதல் 2015ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் 80 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பொலிசாரிடம் கொண்டு வரப்படும் இது தொடர்பான முறைப்பாடுகளும் மாதத்திற்கு 100 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு முதல் இயங்கி வரும் Goddard விசாரணை எனப்படும் ஒழுங்கமைப்பானது நாட்டிலுள்ள சட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் சிறுவர் மற்றும் சிறுவருக்கெதிராக துஸ்பிரயோகங்கள் தொடர்பில் எவ்வாறான செயற்பாடுகளை கொண்டிருக்கின்றது என்பது தொடர்பில் கண்காணிப்பதாக உள்ளது.
இருப்பினும் இங்கிலாந்தில் உள்ள சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விடயமாக அமைந்துள்ளது.
சிறுவர்களுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் தொல்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்....
Reviewed by Author
on
May 21, 2016
Rating:
Reviewed by Author
on
May 21, 2016
Rating:


No comments:
Post a Comment