ஜனாதிபதி மைத்திரி எதிர்வரும் ஜனவரிக்கு முன் படுகொலை! சோதிடர் ஒருவர் பகிரங்க எச்சரிக்கை....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2017 ஜனவரி 26ஆம் திகதிக்கு முன்னர் படுகொலை செய்யப்படுவார் என்று பிரபல சோதிடர் விஜித் ரோஹண விஜயமுனி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக சோதிடர் விஜித் ரோஹன விஜயமுனி காணொளி ஒன்றையும் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
கடந்த வருடம் செப்டம்பரில் அவர் வெளியிட்டுள்ள குறித்த காணொளி அண்மைய நாட்களில் இணையத்தளங்களில் தீவிரமாகப் பரவி வருகின்றது.
Go to Videos
ஜனாதிபதி மைத்திரி எதிர்வரும் ஜனவரிக்கு முன் படுகொலை! சோதிடர் ஒருவர் பகிரங்க எச்சரிக்கை
குறித்த காணொளியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெரும் உயிராபத்து ஒன்றை எதிர்கொண்டுள்ளார்.
பெரும்பாலும் எதிர்வரும் 2017 ஜனவரி 26ஆம் திகதிக்கு முன்னர் அவர் படுகொலை செய்யப்படுவார்.
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச மற்றும் முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க போன்றோர் போன்று படுகொலை செய்யப்படும் அச்சுறுத்தலை அவர் எதிர்கொண்டுள்ளார்.
இதனைத் தடுக்க வேண்டுமாயின் இறைச்சிக்காக அறுக்கப்படவுள்ள பத்தொன்பது மாடுகளுக்கு அவர் உயிர்தானம் அளிக்க வேண்டும்.
அத்துடன் இலங்கையில் மாடறுப்பை முற்றாகத் தடை செய்ய வேண்டும்.
மாடறுப்பைத் தடை செய்தல் போன்ற புண்ணிய காரியம் ஒன்றின் ஊடாக மட்டுமே ஜனாதிபதியின் உயிர் பாதுகாக்கப்படும்.
அதனை அவர் செய்யத் தவறும் பட்சத்தில் யாராலும் அவரது உயிரைப் பாதுகாக்க முடியாது என்றும் சோதிடர் விஜயமுனி எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரி எதிர்வரும் ஜனவரிக்கு முன் படுகொலை! சோதிடர் ஒருவர் பகிரங்க எச்சரிக்கை....
Reviewed by Author
on
May 26, 2016
Rating:

No comments:
Post a Comment