மன்னாரில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி!
யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் இத்திக்கண்டல் கிராமத்தில் உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கணினி அறிவை மேம்படுத்தும் வகையில் மன்னாரில் இயங்கி வரும் நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று இலவச கணினி பயிற்சி நெறிகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் இயக்குனர் கே.பவமொழி பவன் தலைமையில் ஆராம்பமான குறித்த பயிற்சி நெறியினை வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது சமூக சேவையாளரும், சமாதான நீதவானுமாகிய என்.கணேசலிங்கம்(சொக்கன்) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தரம் 4 முதல் உயர் தரம் வரையில் கல்வி கற்கும் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஏற்ற வகையில் குறித்த கணினிக் கல்வி கற்பிக்கப்படவுள்ளது.
சுமார் 3 மாதகாலம் கொண்ட குறித்த பயிற்சி நெறியில் கலந்து கொண்டு பூரணப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் இயக்குனர் கே.பவமொழி பவன் தெரிவித்தார்.
மன்னாரில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி!
Reviewed by Author
on
May 12, 2016
Rating:

No comments:
Post a Comment