பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாத பெற்றோர் மீது சட்டநடவடிக்கை!
5 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாத பெற்றோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஏற்கனவே 1977ஆம் ஆண்டு சட்டப்படி 5 வயது முதல் 14 வயது வரையிலான வயது பிள்ளைகளே பாடசாலைக்கு கட்டாயம் சமுகமளிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
எனினும் அதனை 16 வயது வரையில் அதிகரிக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனைதவிர பிள்ளைகளின் பாடசாலை வரவுகள் தொடர்பில் கண்காணிக்கும் பொறுப்பு வலய கல்வி அதிகாரிகளை கொண்டு குழுவுக்கு வழங்கப்படவுள்ளது.
இவர்கள் பாடசாலை இடைவிலகல்களை தடுக்க நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
இந்தக்குழு, பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க அதிகாரத்தை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாத பெற்றோர் மீது சட்டநடவடிக்கை!
Reviewed by Author
on
May 01, 2016
Rating:

No comments:
Post a Comment