மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு-Photos
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளிமுனை கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன் கிழமை(4) இடம் பெற்றது.
வடமாகாண மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ், 01 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் உத்தியோகபூர்வமாக இன்று புதன் கிழமை காலை 9.30 மணியளவில் உள்ளூர் உற்பத்திப்பொருட்கள் விற்பனை நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பள்ளிமுனை பங்குத்தந்தை, மன்னார் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கேதீஸ்வரன், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
May 04, 2016
Rating:

No comments:
Post a Comment