விமான நிலைய கழிவறையில் குழந்தையை ஈன்ற கர்ப்பிணி: அடுத்தடுத்து நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்....
ஜேர்மனி நாட்டில் உள்ள விமான நிலைய கழிவறையில் பிரசவம் செய்துவிட்டு குழந்தையை அங்கேயே வீசிச் சென்ற தாயாருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த யூலை மாதம் ஜேர்மனியில்உள்ள பவேரியா மாகாணத்தில் நிகழ்ந்தஇந்த சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.
முனிச் நகரை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் அரிய வகையை சேர்ந்த பூனை ஒன்றை துபாயில் விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்த பூனையை துபாயில் இருந்து முனிச் நகருக்கு பத்திரமாக கொண்டு வருவதற்கு ஒருபெண்ணை ஏற்பாடு செய்துள்ளார்.
ஆனால், அந்த பெண் ஒரு நிறைமாத கர்ப்பிணி என்பது அவருக்கு தெரியவரவில்லை.
இந்நிலையில், துபாயிலிருந்து பூனையை பத்திரமாக வைத்துக்கொண்டு விமானத்தில் 23 வயதான அந்த கர்ப்பிணி பெண் ஏறியுள்ளார்.
ஆனால், அப்போதே அவருக்கு பிரசவ வலி லேசாக தொடங்கியுள்ளது.
சுமார் 6 மணி நேரப் பயணத்திற்கு பிறகு, விமானம் முனிச் நகர விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
விமானம் தரையிறங்கியதும் தனக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளதை அறிந்த அந்த கர்ப்பிணி பெண் உடனடியாக தனது தாயாருக்கு தகவல் அளித்துள்ளார்.
விமான நிலையத்தில் ஏற்கனவே தனது மகளுக்காக காத்திருந்த தாயார், அவரை அழைத்துக் கொண்டு வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர், மகளை கழிவறைக்குள் அனுப்பிய தாயார், வெளியே யாராவது வருகிறார்களா என காவலுக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
கழிவறைக்குள் சென்ற அந்த கர்ப்பிணி பெண், கடுமையான போராட்டத்திற்கு பிறகு ஒரு பெண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
குழந்தை பிறந்த அடுத்த கணமே தன்னை சுத்தப்படுத்திக் கொண்ட அந்த பெண் வெளியே வந்து தாயாரை அழைத்துக் கொண்டு உடனடியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில், சில நிமிடங்களுக்கு பிறகு கழிவறையை சுத்தம் செய்ய வந்த ஒரு ஊழியர் உள்ளே ஒரு குழந்தை மயக்க நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவர்கள் மற்றும் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
விரைந்து வந்த மருத்துர்கள் குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் குழந்தையின் உயிரையும் அவர்கள் காப்பாற்றினர்.
கழிவறையில் குழந்தையை பிரசவம் செய்துவிட்டு அதனை தாயார் அங்கேயே வீசிச்சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார் ஒரு கிழமைக்கு பிறகு Heidenheim என்ற நகரில் குழந்தையின் தாயாரைகண்டுபிடித்தனர்.
ஆனால், குழந்தை தனக்கு பிறக்கவில்லை. அது யாருடைய குழந்தை என எனக்கு தெரியாது என தாயார் மறுத்துள்ளார்.
மேலும், ‘என்னுடைய மகள் கர்ப்பாக இருந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது’என குழந்தையை பெற்ற பெண்ணின் தாயாரும் கூறியுள்ளார்.
ஆனால், பல்வேறு ஆதாரங்களை திரட்டிய பொலிசார் குழந்தையின் டி.என்.ஏமற்றும் தாயாரின் டி.என்.ஏவை ஒப்பிட்டு பார்த்தபோது அவர் தான் குழந்தையின் தாயார் என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
தாயார் மீதான விசாரணை இன்று பவேரியா நீதிமன்றத்தில் தொடங்குகிறது.
பெண் மீதான அனைத்துக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலைய கழிவறையில் குழந்தையை ஈன்ற கர்ப்பிணி: அடுத்தடுத்து நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்....
Reviewed by Author
on
May 03, 2016
Rating:

No comments:
Post a Comment