இராணுவம் வெளிறே்றப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை: சிறீதரன் எம்.பி
வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளரை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த இடத்தில் இராணுவம் இருக்கத் தேவையில்லை. அவர்களை வைத்திருக்கவும் தேவையில்லை என அடித்து சொல்ல வேண்டியது தமிழ் மக்களின் கடமை மற்றும் அவர்களை பிரதிநிதிதுவப்படுத்துகின்ற பிரதிநிதிகளுக்குரியது.
இன்றும் கூட கிளிநொச்சி கச்சேரியில் இருக்கின்ற இராணுவம் அதன் ஒரு பகுதியை சுவீகரித்து வைத்திருப்பதை நாங்கள் அறிகின்றோம்.
அதேபோல் கிளிநொச்சியின் நகர பகுதியிலே நாற்பது வீதமான காணிகள் இராணுவத்தின் வசமே உள்ளது. எந்த வித அபிவிருத்தி பணிகளையும் செய்யவிடாது இந்த இராணுவம் தான் இடங்களை பிடித்திருக்கிறது.
ஆகவே இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இல்லை.
இவ்விடயத்தை நாங்கள் திரும்பத்திரும்ப சொல்லுவோம். இதற்காக போராடுவோம். இதனை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
இதனை செய்யத்தவறினால் இது கூட ஒரு விபரீதமான நிகழ்ச்சியாகவே நடந்து முடியும். இராணுவம் மக்களுக்கு எங்கே உதவி செய்கிறது. இராணுவம் மக்களை இன்னும் தொல்லைப்படுத்துகிறது.
சொந்த நிலங்களை பறித்து வைத்திருக்கிறது. குடியேறவிடாமல் தடுத்து வைத்திருக்கிறது.
அடிக்கடி விசாரணைக்களுக்கு கொண்டு செல்கிறார்கள். சிறையிலே வைத்திருக்கின்ற கைதிகளை விடுதலை செய்யவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலங்களிலிலே குந்தியிருந்து மக்களின் இயல்பு வாழ்கையை பாதிக்கச்செய்கிறார்கள்.
இதுவா மக்களுக்கு செய்கின்ற கடமை. அதனால் எமது முடிவுகளில் எந்த மாற்றுக்கருத்துக்களும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இராணுவம் வெளிறே்றப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை: சிறீதரன் எம்.பி
Reviewed by Author
on
May 07, 2016
Rating:
Reviewed by Author
on
May 07, 2016
Rating:


No comments:
Post a Comment