மன்னார் பேசாலை கடலில் நிறுத்திவைக்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பெரிய படகுகள் பல நீரில் மூழ்கின.(படங்கள் இணைப்பு)
மன்னார் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய திடீர் கடும் காற்றின் காரணமாக மீனவ கிராமமான மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 படகுகள் சேதமாகியுள்ளதமாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீர் அற்ற காலநிலை மாற்றத்திற்கு அமைவாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.இந்த நிலையில் இன்று அதிகாலை பேசாலை கடற்கரை பகுதியில் வீசிய திடீர் காற்றின் காரணமாக பேசாலை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் பெறுமதி மிக்க சுமார் 40 பெரிய படகுகள் வரை சேதமாகியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த 40 பெரிய படகுகளில் 20 படகுகள் கடும் சேதமான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய 20 பெரிய படகுகளும் கடலில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடலில் மூழ்கியுள்ள படகுகளை தேடும் பணியில் அப்பகுதி மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே வேளை மாந்தை மேற்கு பிரதேச்ச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 படகுகள் சேதமாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது.
மன்னார் பேசாலை கடலில் நிறுத்திவைக்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பெரிய படகுகள் பல நீரில் மூழ்கின.(படங்கள் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
May 16, 2016
Rating:

No comments:
Post a Comment