அண்மைய செய்திகள்

recent
-

ஆளுநர் தேவையென்கிறார் டெனீஸ்வரன்! வேண்டாமென்கிறார் சிறீகாந்தா?

வட மாகாண ஆளுநர் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து சேவையாற்றும் ஓர் சிறந்த மனிதன். ஒரு பிரதி அமைச்சராகவும், முதலமைச்சராகவும் தற்போது எமது ஆளுநராகவும் சிறப்பாக செயற்பட்டுக்கொண்டு தன்னகத்தே மிகுந்த அனுபவங்களை கொண்ட ஓர் அனுபவசாலி. அத்தோடு இவ்வாறு மிகுந்த அனுபவமுள்ள, இன, மத, மொழி பேதமற்று தனது சேவையை வழங்கும் இந்த ஆளுநரின் ஊடாக எமது மாகாணத்தின் தேவைகளை நிறைவேற்றாவிடின் வேறு யாரை கொண்டும் நாம் நமது தேவைகளை நிறைவேற்ற முடியாது என தெரிவித்துள்ளார் வடமாகாண அமைச்சர் சி.டெனீஸ்வரன்.

வடமாகாண ஆளுநரை மாற்றக்கோரி அவரது கட்சியான டெலோ கடுமையான கருத்துக்களினை முன்வைத்து வரும் நிலையினில் தற்போது ஒரு சிலர் குறுகிய அரசியல் நோக்கோடும் குறுகிய ஓர் வட்டத்திற்குள் நின்றுகொண்டு சிந்திப்பவர்களாக ஆளுநரை குறைகூறுபவர்களாகவும் அவரை மாகாணத்தில் நின்று வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் குற்றம் சுமத்தி வருகின்றனரெனவும் டெனீஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாகாணத்திற்கு வருகின்ற சகல ஆளுநர்களையும் குறை கூறுகின்றோமெனில்இ பிழை எங்கே இருக்கின்றது என்பதை நாம் முதலில் இனம்காண வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தை நான் நினைவுகூர விரும்புகிறேன் அதாவது ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்று சொல்லும் கதைபோல இருப்பதாகவும் தெரிவித்ததோடு முன்னைய ஆளுநர்கள் எவ்வாறானவர்களாக இருந்திருப்பினும் தற்போதைய ஆளுநரை நாம் சரியான முறையிலே விளங்கிக்கொண்டு அவருடன் இணைந்து நமது மாகாணத்தின் அபிவிருத்திகளை முன்னெடுக்க முனையவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை டெலோ கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சிறீகாந்தா பத்திரிகையாளர் மாநாடொன்றை கூட்டி ஆளுநரை மாற்றம் செய்யவேண்டுமென அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடையவை

இன, மத, மொழி பேதங்களைக் கடந்து சேவை செய்கின்றார் வட மாகாண ஆளுநர்

அதிகார வரம்பை மீறி ஆளுநர் செயற்படுகிறார்! அவர் தலைமையிலான கூட்டங்களை வடக்கு உறுப்பினர்கள் புறக்கணிக்க முடிவு..


ஆளுநர் தேவையென்கிறார் டெனீஸ்வரன்! வேண்டாமென்கிறார் சிறீகாந்தா? Reviewed by NEWMANNAR on May 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.