அண்மைய செய்திகள்

recent
-

மொறட்டுவைப் பல்கழைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தினால் மன்னாரில் நடாத்தப்பட்ட சொற்கணை விவாதச்சமர்-Photos

மொறட்டுவைப் பல்கழைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டு நடாத்திவரும் அகில இலங்கை ரீதியிலான சொற்கணை விவாதச்சமரின் மாவட்டமட்ட போட்டி இன்று (28-05-2016) மன்னாரில் மகேந்திரன் மோட்டார்ஸ் பிரதான அநுசரணையில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் எம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு பாடசாலைகள் பங்கு பற்றியிருந்தன. இப்போட்டியினை மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.எஸ்.செபஸ்ரியான் ஆரம்பித்து வைக்க போட்டியின் பிரதான நடுவர் திரு.செபஸ்ரியாம்பிள்ளை நிக்சன் தலைமையில், வலயக்கல்விப் பணிமனையில் தமிழ்சார் பணிபுரிவோர்,மன்னார் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், நடுவர்களாக சேவை அடிப்படையில் கடமையாற்றினர்.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இவ்விவாதப் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளை முறையே மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி, மன்/அடம்பன் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மற்றும் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி ஆகியன தட்டிச்சென்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. முதலிடம் பெற்ற பாடசாலை தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளதுடன் அப்பாடசாலை நூலகத்திற்கு பிரபல இந்திய எழுத்தாளர்களின் கையொப்பமிடப்பட்ட நூல்களும் வழங்கப்பட்டது.

இப்போட்டியினை மன்னார் மாவட்ட சொற்கணை இணைப்பாளர் பு.ஐசிந்தன் மற்றும் துணை இணைப்பாளர் மு.ஜனார்த் ஆகியோர் மிகவும் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தனர்.

மன்னார் மண்ணில் இத்தகைய தமிழ்மொழி சார் நிகழ்வுகள் நடாத்தப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது. அதற்கு போதியளவு நிதி வழங்கி உதவிசெய்த மன்னார் வாழ் மக்கள் வரவேற்கப்படவேண்டியவர்கள்.

இவ்வாறான நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் இன்னமும் சிறப்பாக நடைபெறவேண்டும். கல்வித்தரத்தில் மாவட்ட நிலை உயரவேண்டும். இதற்காக நம் கல்விசார் சமூகம் சேவைமனப்பாங்கோடு முன்வரவேண்டும். எனக்கூறி வெற்றிபெற்ற அணிகளுக்கு வாழ்த்துக்கூறி நடுவர் குழாமிற்கு நன்றி கலந்த வணக்கங்கள்.












மொறட்டுவைப் பல்கழைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தினால் மன்னாரில் நடாத்தப்பட்ட சொற்கணை விவாதச்சமர்-Photos Reviewed by NEWMANNAR on May 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.