அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு இளைஞன் பொலிஸாரால் சுட்டுக் கைது!


முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் மாலை வீட்டில் இருந்த இளைஞனை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு கைதுசெய்துள்ளனர். ஆனால்
காரணம் எதுவும் இன்றி தனது மகனை கைது செய்துள்ளதாக குறித்த இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதியில் உள்ள மாதிரி கிராமம் ஒன்றில் வசிக்கும் விவேகானந்தன் தியீபன் வயது 27 என்பவரே கைது செய்யப்பட்டவராவார்.

குறித்த நபர் மணல் கடத்தலில் ஈடுபட்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்
குறித்த வழக்கு நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில் நேற்றைய தினம் குறித்த நபர் வீட்டில் இருந்த சமயம் சிவில் உடையில் வந்த 2 பொலிஸார் அவரை கைது செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் இரு தரப்பினருக்குமிடையில் நடைபெற்ற வாக்கு வாதத்தின் போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த மேலும் சில பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை எனவும் கைது செய்ததற்கான காரணம் எதுவும் இதுவரை தமக்கு தெரிவிக்கவில்லை எனவும் கைது செய்யப்பட்டவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு இளைஞன் பொலிஸாரால் சுட்டுக் கைது! Reviewed by NEWMANNAR on May 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.