ஒரே நேரத்தில் ATM மையங்களில் 186 கோடி ரூபாய் திருட்டு: அதிர்ச்சியில் பொலிஸ்....
ஜப்பான் நாட்டில் ஒரே நேரத்தில் 100 திருடர்கள் வெவ்வேறு ஏ.டி.எம் மையங்களில் 186 கோடி ரூபாயை கொள்ளையிட்டுள்ள சம்பவம் அந்நாட்டு பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த மே 15ம் திகதி அதிகாலை 5 மணியிலிருந்து 8 மணி வரை நகரில் உள்ள 1,400 ஏ.டி.எம்மையங்களில் ஒரே நேரத்தில் 100 கொள்ளையர்கள் திருடியுள்ளனர்.
அதாவது,போலியாக செய்யப்பட்ட கடன் அட்டைகளை(Credit Cards) பயன்படுத்தி கொள்ளையர்கள் இந்த சதி வேலையை செய்துள்ளனர்.
பொலிசார் விசாரணையில் இறங்கியபோது, பணம் எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கடன் அட்டைகள் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு வங்கி மூலம் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதன் மூலம், இந்த செயலில்இறங்கியவர்கள் நிச்சயமாக சர்வதேச கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் அவர்கள் தற்போது ஜப்பானில் இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு கொள்ளையனும் ஒரு மையத்திலிருந்து 1,00,000 யென் (1,33,754 இலங்கைரூபாய்) வரை திருடியுள்ளனர். ஏனெனில், ஜப்பான் ஏ.டி.எம்மையங்களில் அதிகபட்சமாக 1,00,000 யென் மட்டுமே எடுக்கமுடியும்.
இவ்வாறு பணம் எடுத்த கொள்ளையர்கள் 1,600 போலிகடன் அட்டைகளை பயன்படுத்தி ஒட்டுமொத்தமாக 12,7 மில்லியன் டொலர்( 1,86,45,50,500 இலங்கை ரூபாய்) பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
இந்த தகவல் வெளியானதும் அதிர்ச்சி அடைந்த பொலிசார் உடனடியாக தென் ஆப்பிரிக்காவில் உள்ள அந்த வங்கியை தொடர்புக்கொண்டு ‘ஜப்பான் வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களை சேகரித்து போலி கடன் அட்டைகளை எவ்வாறு தயாரிக்கப்பட்டது?’ என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜப்பான் தலைநகரில் ஒரே நேரத்தில் 186 கோடிஇலங்கை ரூபாய் வரை கொள்ளையிட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நேரத்தில் ATM மையங்களில் 186 கோடி ரூபாய் திருட்டு: அதிர்ச்சியில் பொலிஸ்....
Reviewed by Author
on
May 23, 2016
Rating:

No comments:
Post a Comment