அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாண குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராய நேரடியாக களமிறங்கும் பொலிஸ் மாஅதிபர்...


யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர நேரடியாக களமிறங்கவுள்ளார்.

யாழ்ப்பாண மண்ணில் நடைபெறும் குற்றச்செயல்கள் மற்றும் சமூக அவலங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் அமைச்சர் மனோ கணேசனிடம் பிரஸ்தாபித்திருந்ததுடன், அவற்றைக் கட்டுப்படுத்துவற்கான தலையீடொன்றை மேற்கொள்ளுமாறும் அவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் நேரடியாக கலந்துரையாடிய அமைச்சர் மனோ கணேசன், உடனடி நடவடிக்கை தொடர்பில் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் தானே நேரடியாக களத்தில் இறங்கி அங்கு மூன்று நாட்கள் வரை தங்கியிருந்து நிலைமைகளை அவதானிக்கவும், அதன் பின் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் இது தொடர்பாக அவரது பேஸ்புக் பக்கத்தில் தகவல் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

யாழ்ப்பாண குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராய நேரடியாக களமிறங்கும் பொலிஸ் மாஅதிபர்... Reviewed by Author on May 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.