அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தனுடன் கருத்து முரண்பாடு இல்லை: விக்னேஸ்வரன்....


எதிர்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் தனக்கும் இடையில் எந்தவொரு கருத்து முரண்பாடுகளும் இல்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்விற்கு வருகை தந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம், சம்பந்தனுடனான கருத்து முரண்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர், தனது உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த எதிர்கட்சித்தலைவரை சந்திக்க முடியாமல்போனதாகவும், அவருடன் எந்தவொரு கருத்து முரண்பாடுகளும் இல்லையெனவும் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் வாரம் கொழும்பிற்கு விஜயம் செய்து எதிர்கட்சித் தலைவரை சந்தித்து வடமாகாண சபையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவை கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


சம்பந்தனுடன் கருத்து முரண்பாடு இல்லை: விக்னேஸ்வரன்.... Reviewed by Author on May 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.