அண்மைய செய்திகள்

recent
-

மடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்படவிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் மீட்பு-இருவர் கைது.photos

சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை மடு பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை(3) அதிகாலை கைப்பற்றியுள்ளதோடு, சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

மடு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிருச்சான் காட்டுப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரங்கள் வெட்டப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜட்டவல அவர்களின் பனிப்புரைக்கு அமைவாகவும்,உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழி நடத்ததில் மடு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.பி.வி.மடவல தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை(3) அதிகாலை பண்டிவிருச்சான் காட்டுப்பகுதிக்குள் சென்று தேடுதல்களை மேற்கொண்டனர்.

இதன் போது சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு லொரியில் ஏற்றப்பட்டு உமி மூடைகயினால் மறைத்து வைத்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை மீட்டதோடு,சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டடிய இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

பின் மரக்குற்றிகள் ஏற்றப்பட்ட லொரி மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அவர்கள் பயண்படுத்திய மோட்டார் சைக்கில்கள் என்பன மடு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பின் லொரி முழுமையாக சோதனையிடப்பட்ட போது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 47 முதிரை மரக்குற்றிகள் உமி மூடைகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் பண்டிவிருச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த இரு சந்தேக நபர்களும் நேற்று(3) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிடடுள்ளார்.

மேலதிக விசாரனைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக மடு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.பி.வி.மடவல மேலும் தெரிவித்தார்.


(மன்னார் நிருபர்)
(4-05-2016)



மடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்படவிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் மீட்பு-இருவர் கைது.photos Reviewed by NEWMANNAR on May 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.