குளத்து நீரை வெளியேற்றி மீன்பிடியில் ஈடுபட்ட 5 பேர் கைது.
மடு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் காட்டுப்பகுதியில் உள்ள குளம் ஒன்றினுள் சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட 5 பேரை மடு பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை(3) கைது செய்துள்ளதாக மடு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.பி.வி.மடவல தெரிவித்தார்.
மடு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் காட்டுப்பகுதியில் உள்ள புலிப்பாலன் குளத்தில் உள்ள நீரை வெளியேற்றிய நிலையில் மீன் பிடியில் ஈடுபட்ட 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குளத்தில் உள்ள நீரை அப்பகுதியில் உள்ள காட்டு மிருகங்கள் மற்றும் பறவைகள் குடித்து வந்த நிலையில் குறித்த காட்டுப்பகுதியில் உள்ள நீரை வெளியேற்றி மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் குறித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தற்போது மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருவதாகவும்,விசாரனைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் மடு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
(4-05-20160
மடு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் காட்டுப்பகுதியில் உள்ள புலிப்பாலன் குளத்தில் உள்ள நீரை வெளியேற்றிய நிலையில் மீன் பிடியில் ஈடுபட்ட 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தற்போது மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருவதாகவும்,விசாரனைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் மடு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
(4-05-20160
குளத்து நீரை வெளியேற்றி மீன்பிடியில் ஈடுபட்ட 5 பேர் கைது.
Reviewed by NEWMANNAR
on
May 04, 2016
Rating:
No comments:
Post a Comment