உலகின் வினோத 10 பள்ளிகள்.., மோட்டு பட்லு , நிஞ்சா டெக்னிக்,கட்டோரி கேரக்டர் எல்லாம் இங்கதான்..!!
பள்ளிக்கூடம் என்ற வார்த்தையை கேட்டவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன....
மாணவர்கள் தூக்கிக்கொண்டு செல்லும் பை, மேசை, நாற்காலி, ஆசியர்கள்.. எக்ஸட்ரா.... எக்ஸட்ரா.., இவைதான். சரியா இல்லையா? ஆனால் உங்களுக்கு தெரியுமா, சில பள்ளிகள் வழக்கத்தற்கு மாறாக செயல்படுகிறன்றன.
வழக்கத்திற்கு மாறாக செயல்படும் உலகின் வினோதமான 10 பள்ளிகளை இங்கு பார்ப்போம்.
1. விபச்சாரத்தை கற்றுக்கொடுக்கும் பள்ளி(ஸ்பெயின்)
ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பள்ளி பாலியல் கல்வியை முக்கியப் பாடமாக வைத்துள்ளது. அதற்கு ‘ட்ராபஜோ’(trabajo) என்று பெயர் வைத்துள்ளது. அதாவது ‘வேலை இப்போது’ என்று அர்த்தமாம்.
2. பூமிக்கு அடியில் செயல்படும் அபோ தொடக்கப்பள்ளி (அமெரிக்கா)
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் பூமிக்கு அடியில் (underground) அபோ தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
3.படகு பள்ளி (வங்கதேசம்)
வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக படகு பள்ளி செயல்படுகிறது. சிதுலால் ஸ்வனிவார் சன்ஸ்தா என்ற பெயரில் அழைக்கப்படும் அமைப்பு ஒன்று, படகில் வீடு, மருத்துவ மையம் மற்றும் மிதக்கும் பள்ளிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏற்படுத்தியது. 100 மிதக்கும் பள்ளிகளை இந்த அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாசலுக்கே சென்று இந்த மிதக்கும் பள்ளி மாணவர்களை பிக் அப் செய்து கொள்ளும்.
4.குலு தொடக்கப்பள்ளி (சீனா)
மாணவர்கள் கடினமான மலைச்சரிவை ஆபத்தான முறையில் கடந்து சென்று தான் குலு தொடக்கப்பள்ளியை அடைகிறார்கள்.
5. ரயில்நிலைய நடைபாதை பள்ளி(இந்தியா)
1985ம் ஆண்டு ரயில் நிலைய நடைபாதைகளில் இந்திரஜித் குரானவால் ரயில்நிலைய நடைபாதை பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பெற்றோர்களால் பள்ளிக்கு அனுப்ப முடியாத தெருவோரக் குழந்தைகள் கல்வி கற்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
6. தி ஸ்கூல் ஆப் தி ப்யூச்சர் (பிலடெல்பியா) - பென்சில்வேனியா
பென்சில்வேனியாவின் மிகப்பெரிய நகரான பிலடெல்பியாவில் The School Of The Future என்ற பெயரில் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில், மாணவர்களிடம் புத்தகங்கள் இல்லை. அனைவரிடமும் லேப் டாப் உள்ளது.இந்த பள்ளி முழுமையாக ஹைடெக்கான தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகும்.
7. ஹார்வி மில்க் உயர்நிலைப்பள்ளி(நியூயார்க்)
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக பாடுபட்ட ஹார்வி மில்க் என்பவர் பெயரில் இந்த பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த பள்ளி ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்டவர்களுக்காக செயல்பட்டது. தற்போது அனைத்து தரப்பினரும் இந்த பள்ளியில் படிக்கின்றனர்.
8. மாயாஜாலங்களை கற்று தரும் பள்ளி -விட்ச் ஸ்கூல்( மஸ்ஸசூசெட்ஸ்)
விட்ச்(witch) பள்ளி உலக அளவில் மாயாஜால, மந்திர தந்திர வித்தைகளை கற்றுத்தருகிறது.
9.புரூக்ளின் இலவசப் பள்ளி(அமெரிக்கா)
அமெரிக்காவில் செயல்படும் புரூக்ளின் இலவசப் பள்ளி, மாணவர்களை சுதந்திரமாக கல்வி கற்க அனுமதிக்கிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் வயது வாரியாக இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகின்றனர். 11 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்கள் உயர் வகுப்பிலும், 4 முதல் 11 வயது வரை உள்ள மாணவர்கள் கீழ் வகுப்பிலும் படிக்கலாம்.
மாணவர்கள் எந்த வகுப்பில் படித்தாலும், எந்த வகுப்பில் வேண்டுமானாலும் சென்று கல்வி கற்கலாம். அதனை இந்த பள்ளி முழுமையாக அனுமதிக்கிறது. இதனால் இந்த பள்ளியின் பாடத்திட்டத்தில் குறைபாடு உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
10.டான்ஜாங் மிட்-கேவ் ஆரம்ப பள்ளி(சீனா)
டான்ஜாங் மிட்-கேவ் ஆரம்ப பள்ளி சினாவில் குகை பகுதியில் 1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அங்கு 8 ஆசிரியர்கள், 186 மாணவர்கள் படித்தனர். குகையில் வசிக்கும் மக்களின் பயத்தின் காரணமாக 23 வருடங்களுக்கு பிறகு சீன அதிகாரிகள் அந்த குகைப்பள்ளியை மூடிவிட்டனர்.
உலகின் வினோத 10 பள்ளிகள்.., மோட்டு பட்லு , நிஞ்சா டெக்னிக்,கட்டோரி கேரக்டர் எல்லாம் இங்கதான்..!!
Reviewed by Author
on
June 28, 2016
Rating:

No comments:
Post a Comment