அமெரிக்க அதிபருக்கு இணையாக பிரதமர் மோடிக்காக ரூ.2,000 கோடியில் பிரத்யேக விமானம்...
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அமெரிக்க அதிபரின் விமானத்துக்கு இணையான வசதிகளைக் கொண்ட புதிய விமானம் வாங்கப்பட உள்ளது.
வருகிற 25ம் தேதி பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தலைமையில் நடைபெற உள்ள பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதலுக்கான குழு இதற்கான முடிவை இறுதி செய்யவுள்ளது. இப்போது ஏர் இந்தியா 747 -400 மாடல் விமானத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். புதிதாக நவீன வசதிகள் மற்றும் அதிக பாதுகாப்புடன் கூடிய போயிங் 777 - 300 ரக விமானத்தை வாங்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
அதன்படி, வாங்கப்படவுள்ள விமானத்தில் பிரதமரின் முகாம் அலுவலகம், படுக்கையறை இருக்கும். நவீன தகவல் தொழில்நுட்பக் கருவிகள், எதிரி வாகனங்கள், விமானங்களைத் தடுக்கும் ஜாமர் கருவிகள் விமானத்தில் இடம்பெறும். கையெறி குண்டு மற்றும் ராக்கெட் தாக்குதலால் விமானம் பாதிக்கப்படாததுடன், எதிர்வரும் ராக்கெட் உள்ளிட்ட ஆபத்துகளை முன்கூட்டி கணிக்கும் வசதி இருக்கும்.
2 ஆயிரம் பேருக்குத் தேவையான உணவு இருப்பு வைக்கும் வசதியுடன் அவசரகாலத்தில் நடுவானில் வேறொரு விமானம் மூலம் எரிபொருள் நிரப்பும் வசதியும் கொண்டிருக்கும். 24 மணி நேர அதிநவீன மருத்துவ வசதி, அறுவை சிகிச்சை அரங்கம், 19 தொலைக்காட்சிப் பெட்டிகள் இந்த சிறப்பு விமானத்தில் இடம்பெறும் என்றும் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபருக்கு இணையாக பிரதமர் மோடிக்காக ரூ.2,000 கோடியில் பிரத்யேக விமானம்...
Reviewed by Author
on
June 22, 2016
Rating:

No comments:
Post a Comment