அண்மைய செய்திகள்

recent
-

3 ஆண்டுகளில் 1075 சந்தர்ப்பங்களில் வெளிநாட்டவர்ளுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை....


2013 ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான மூன்றாண்டு காலப்பகுதியில் 1075 சந்தர்ப்பங்களில் வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை கிசிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் வைத்தியசாலை அபிவிருத்தி ஆவணங்களை பரிசீலனை செய்ததன் மூலம் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

1075 சந்தர்ப்பங்களில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் 245 ஆவணங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மருத்துவர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் இறப்பர் முத்திரைகளை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களை எதிர்வரும் 14ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 ஆண்டுகளில் 1075 சந்தர்ப்பங்களில் வெளிநாட்டவர்ளுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை.... Reviewed by Author on June 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.