அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு: எதனால் தெரியுமா?


இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

உலகில் ஒரு ஆண்டில் மட்டும் 5,29,000 பெண்கள் மகப்பபேறின் போது இறப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதில் 25.7 சதவீதம் அதாவது 1,36,000 பேர் இந்தியாவில்மட்டும் உயிரிழப்பு ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

மூன்றில் இரண்டு பங்கு பேர் மகப்பேறுக்குபின் ஏற்படும் இரத்தப்போக்கால் உயிரிழக்கிறார்கள். குழந்தை பிறந்த 24 மணிநேரத்திற்குள் சுமார் 500 மி.லி அல்லது 1000 மி.லி இரத்தம் இழப்பதே பெரும்பாலும் ஏற்படும் சிக்கல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2011-13 ஆண்டுகளில் இறப்பு விகிதம் என்பது 1 லட்சம் பிறப்புகளுக்கு சுமார் 167 இறப்புகளாக உள்ளது. 1.2 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மட்டும் 12 மில்லியன் யூனிட் இரத்தம் தேவைப்படும்போது வெரும் 9 மில்லியன் இரத்தம் மட்டுமே பெறப்படுகிறது.

இதனால்இந்தியாவில் 25 சதவீதம் பற்றாக்குறை ஏற்படுகிறது. இரத்த மேலாண்மை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என்றும் உலகசுகாதார அமைப்பு தன் அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.

இது போன்ற இறப்புகளை தடுக்க வேண்டுமானால், இரத்த தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும். இதுகுறித்த போதிய விழிப்புணர்வை அரசு எற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

அதிகபட்ச இறப்புகளை பதிவு செய்வது அசாம் மாநிலம் என்றும் குறைந்தபட்சம் கேரளாஎன்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு: எதனால் தெரியுமா? Reviewed by Author on June 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.