அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.

 இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் 'ஹேவிண்ட் வன் லிமிடெட் நிறுவனத்தின்' (HyWind One) காற்றாலை மின் திட்டத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு   ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று வியாழக்கிழமை (15) மன்னார் கொன்னயன் குடியிருப்பில் நடைபெற்றது.


ஹேலிஸ் பென்டன் (Hayleys Fentons) மற்றும் ஹேலிஸ் (The World of Hayleys) குழுமத்தின் அங்கமான ஹேவிண்ட் வன் லிமிட்டெட்  நிறுவனம், இலங்கை மின்சார சபையுடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

 

இந்நிகழ்வில் வலுசக்தி   அமைச்சர் குமார ஜெயக்கொடி, வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன், வலுசக்தி   பிரதி அமைச்சர்  இலியாஸ் முஹம்மது அஹ்ரம் , கூட்டுறவுத்துறை   பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,   நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரும், மன்னார் மாவட்டச் செயலாளர் கே.கனகேஸ்வரன், முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

 

மன்னார் பகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டமானது, நாட்டின் தேசிய மின் வழங்கலுக்கு தூய எரிசக்தியை சேர்ப்பதோடு, சூழலுக்கு உகந்த மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் ஒரு முன்னோடித் திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தத் திட்டம் 18 மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.




















மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. Reviewed by Vijithan on January 15, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.