அன்று நாய்களோடு.. இன்று 9 வது மாடியில்: உருக்கமாக பேசிய கருணாஸ்....
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ் நேற்று சட்டசபையில் உருக்கமாக பேசியுள்ளார்.
சென்னையில் தங்க இடம் இல்லாமல் எம்எல்ஏ விடுதி வளாகத்தில் காவலர்களுக்கு தெரியாமல் நாய்களோடு படுத்து உறங்கினேன்.
அப்படிப்பட்ட நான் இன்று, எம்எல்ஏவாக அதே விடுதியின் 9 வது மாடியின் தங்கும் நிலையில் உள்ளேன் என்றால், அதற்கு முழுக்காரணம் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் எனக்கூறியுள்ளார்.
மேலும் இதற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அவர், திருவாடனை தொகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ராமநாதபுரத்தில் உள்ள கண்மாய்களை தூர்வார வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்று நாய்களோடு.. இன்று 9 வது மாடியில்: உருக்கமாக பேசிய கருணாஸ்....
Reviewed by Author
on
June 22, 2016
Rating:

No comments:
Post a Comment