அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஈழத்தமிழர்கள் 9 பேர் கைது...
தூத்துக்குடியிலிருந்து இடைத்தரகர் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்றதாக ஈழத்தமிழர்கள் 9 பேரை கியூ பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்துரில் உள்ள விடுதி ஒன்றில் 9 ஈழத்தமிழர்கள் தங்கியிருந்தனர். இவர்கள் அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்ல முயற்சி செய்ததாக கியூ பிரிவு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
மேலும், அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் மூலம் அவுஸ்திரேலியா செல்ல இருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களை அதிரடியாக கைது செய்த பொலிசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஈழத்தமிழர்கள் 9 பேர் கைது...
Reviewed by Author
on
June 28, 2016
Rating:

No comments:
Post a Comment