மது மற்றும் சிகரெட் பழக்கங்களால் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் தெரியுமா?
மது அருந்துதல் மற்றும் சிகரெட் பிடிப்பது போன்ற தீய பழக்கத்திற்காக ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் எவ்வளவு செலவு செய்கிறார் என்பது தொடர்பாக கனடா நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மது அருந்துவது சிகரெட் பிடிப்பது போன்ற பழக்கத்தை நிறுத்தினால் அதிகளவில் பணம் சேமிக்கலாம் என்பது இப்பழக்கம் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தெரியும்.
ஆனால், தனது வாழ்நாள் முழுவதும் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியும்? இந்த சேமிப்பின் மூலம் எவ்வளவு வருமானம் பெற முடியும் என்பது குறித்து Canadian Men's Health Foundation என்ற தொண்டு நிறுவனம் கனடா பொதுமக்கள் மத்தியில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
மது மற்றும் சிகரெட் பழக்கம் உள்ள ஆண்களின் செலவுகளை பற்றி மட்டும் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில், ’ஒரு நாளில் 5 சிகரெட் பிடித்து ஒரே ஒரு முறை மட்டும் மது அருந்துவதன் மூலம் ஒரு நபர் அவரது வாழ்நாள் முழுவதும் 2,75,000 டொலர்(3,98,14,500 கோடி இலங்கை ரூபாய்) செலவிடுகிறார்.
இந்த தொகையை 30 முதல் 75 வயது வரை ஒரு துறையில் முதலீடு செய்திருந்தால், அவருக்கு 1.7 மில்லியன் டொலர்(24,61,26,000 கோடி இலங்கை ரூபாய்) வருமானம் கிடைக்கும்.
இதேபோல், ஒரு நாளில் 20 சிகரெட்டுகள் பிடித்து 3 முறை மது அருந்தும் பழக்கம் உள்ள ஒரு நபர் அவரது வாழ்நாள் முழுவதும் 6,28,000 டொலர் செலவிடுகிறார்.
இந்த தொகையை அவர் 45 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தால், அவருக்கு 3.2 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்திருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட தொண்டு நிறுவனத்தின் தலைவரான Wayne Hartrick என்பவர் பேசியபோது, ‘கனடா நாட்டில் உள்ள ஒரு ஆணின் சராசரி ஆயுட்காலம் 79 வயது ஆகும். ஆனால், அந்த ஆண் மது சிகரெட் போன்ற தீயப்பழக்கத்திற்கு அடிமை ஆவதால், அவர் 10 வருடங்களுக்கு முன்னதாகவே உயிரிழக்க நேரிடுகிறது.
மது, சிகரெட் போன்ற பழக்கத்தால் தன்னுடைய நிதியை மட்டும் ஒருவர் இழக்கவில்லை. இதனால், நாட்டின் பொருளாதாரத்திற்கும் இழப்பீடு ஏற்படுகிறது.
இந்த பழக்கத்தால் உண்டாகும் வியாதிகளை குணப்படுத்த கனடா அரசாங்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 20.3 பில்லியன் டொலர் தேவைப்படுகிறது.
ஆனால், இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழ்வதுடன், நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என Wayne Hartrick தெரிவித்துள்ளார்.
மது மற்றும் சிகரெட் பழக்கங்களால் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் தெரியுமா?
Reviewed by Author
on
June 14, 2016
Rating:

No comments:
Post a Comment