எதிர்க்கட்சித் தலைவருக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு அவரது பதவிக்காக கொழும்பில் வழங்கப்பட வேண்டிய உத்தியோகபூர்வ இல்லம் இன்னும் வழங்கப்படவில்லை தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களுக்கு கொழும்பில் சொந்த வீடுகள் இருக்கும் நிலையில், உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவருக்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்காதது பிரச்சினைக்குரிய விடயமாக மாறியுள்ளது.
சுகவீனமான நிலையில், இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தொடர்பில் இவ்வாறு செயற்படுவது நல்லாட்சி அரசாங்கத்திற்கு பொறுத்தமானதல்ல என சுட்டிக்காட்டப்படடுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் கொழும்பில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை!
Reviewed by Author
on
June 15, 2016
Rating:

No comments:
Post a Comment